தள்ளாடித் தள்ளாடி நடை நடந்து - நாங்க
சபரிமலை நோக்கி வந்தோமய்யா (தள்ளாடி)

கார்த்திகை நல்ல நாளில் மாலையும் போட்டுகிட்டு
காலையும் மாலையும் சரணங்கள் சொல்லிகிட்டு
சாமியே ஐயப்போ ஐயப்போ சாமியே
சரணங்கள் சொல்லிக் கொண்டு வந்தோமையா
சபரிமலை நோக்கி வந்தோமையா (தள்ளாடி)

இருமுடியைக் கட்டிகிட்டு இன்பமாக பாடிகிட்டு
ஈசன் மகனெ உந்தன் இருப்பிடத்தை தேடிக்கிட்டு (தள்ளாடி)
சாமியே ஐயப்போ ஐயப்போ சாமியே
சரணங்கள் சொல்லிக் கொண்டு வந்தோமையா
சபரிமலை நோக்கி வந்தோமையா (தள்ளாடி)

வேட்டைகளும் துள்ளி கிட்டு வேஷங்களும் போட்டுகிட்டு
வேடிக்கையாக நாங்கள் ஆட்டங்களும் ஆடிக்கிட்டு
சாமி திந்தகத்தோம் ஐயப்ப திந்தகத்தோம்
சரணங்கள் சொல்லிக் கொண்டு வந்தோமையா
சபரிமலை நோக்கி வந்தோமையா (தள்ளாடி)

காணாத காட்சியெல்லாம் கண்ணாரக் கண்டுகிட்டு
காடுமலைகளெல்லாம் கால் நடையாத் தாண்டிகிட்டு
பம்பையில் குளித்து விட்டு பாபமெல்லாம் போக்கி விட்டு
பக்தரெல்லாம் கூடி நின்று பஜனைகள் பாடிக்கிட்டு
சாமியே ஐயப்போ ஐயப்போ சாமியே
சரணங்கள் சொல்லிக் கொண்டு வந்தோமையா
சபரிமலை நோக்கி வந்தோமையா (தள்ளாடி)

படியேறி போகும் போது பாங்காகக்காய் உடைத்து
பாலனான உந்தனையே பார்த்து சொக்கிகிட்டு
நெய்யிலே குளிக்கும் போது நேரிலேயே பார்த்து கிட்டு
ஐயா சரணம் என்று அலறியடிச்சுக் கிட்டு
சாமியே ஐயப்போ ஐயப்போ சாமியே
சரணங்கள் சொல்லிக் கொண்டு வந்தோமையா
சபரிமலை நோக்கி வந்தோமையா (தள்ளாடி)