லயன் சித்தி விநாயகர்

அரோகரா

நெஞ்சுருக வேண்டியே
நிலம்பட சிரம் தொட்டு
வேண்டுவோர் நெஞ்சமெல்லாம்

ஐங்கரன் தோன்றுவான்
ஆனைமுகம் காட்டுவான்
ஆனந்தமாக வந்து

கொஞ்சுதமிழ் மொழியிலே
குறைதீர்க்க வேண்டுமென
கும்பிட்டு பண்ணிசைத்தால்

சங்கரன் பெற்றமகன்
சக்தியவள் முதற்பாலன்
சர்வமும் காத்துநிற்பான்

சிங்கப்பூர் நகரிலே
சீர்விளங்கும் நகரத்தார்
சிறப்பிற்கும் துணைபுரிந்தாய்

எங்குல நாயகா
ஏழைப் பங்காளனே
எழிலரசே காக்க வேண்டும்

மங்கை சிவகாமியும்
மண்ணாளும் ஈசனும்
மகனாக ஈன்ற போதும்

எங்கும் நீ முதற்தெய்வம்
எல்லோர்க்கும் முதல் கடவுள்
எங்கள் குறை தீர்க்க வேண்டும்

லயன் சித்தி ஆலயத்தை
வலம் வந்து வணங்குவோர்
பயம்விட்டுப் போகுதப்பா

காலையும் மாலையும்
கால்வலிக்க சுற்றுவோர்
கண்டபலன் கோடியப்பா

ஆலயம் சுற்றியே
ஆனைமுகம் உன்னையே
அன்பர்கள் வேண்டுகின்றோம்

வேளையது ஆண்டவா
வேழமுக நாயகா
வினைதீர்த்து காக்க வேண்டும்.

-சிங்கப்பூர் நகரத்தார் தொண்டர் குழு