பரவு நெடுங்கதிர்  (மதுரை)

பரவு நெடுங்கதி ருலகில் விரும்பிய
பவனி வரும்படி ...... யதனாலே

பகர வளங்களு நிகர விளங்கிய
இருளை விடிந்தது ...... நிலவாலே

வரையினி லெங்கணு முலவி நிறைந்தது
வரிசை தரும்பத ...... மதுபாடி

வளமொடு செந்தமி ழுரைசெய அன்பரு
மகிழ வரங்களு ...... மருள்வாயே

அரஹர சுந்தர அறுமுக என்றுனி
அடியர் பணிந்திட ...... மகிழ்வோனே

அசலநெ டுங்கொடி அமையுமை தன்சுத
குறமக ளிங்கித ...... மணவாளா

கருதரு திண்புய சரவண குங்கும
களபம ணிந்திடு ...... மணிமார்பா

கனக மிகும்பதி மதுரை வளம்பதி
யதனில் வளர்ந்தருள் ...... பெருமாளே