மரத்தாண்ட ஆண்டவா

மரத்தாண்ட ஆண்டவா மனமிரங்கி அருளப்பா
மரமாக நின்றவா மரத்தாண்ட ஆண்டவா


உள்ளம் உருக வேண்டியே உன்னைத் தேடி வருகின்றோம்
மரமாக நின்றவா மரத்தாண்ட ஆண்டவா
அடிபணிந்து வணங்கவே அன்போடு வருகின்றோம்
அனைவரையும் காத்திடுவாய் ஆறுமுக வேலவா(மரத்தாண்ட)

பழனியிலே ஆண்டியாய் நின்றவனும் நீயப்பா
பாரெல்லாம் கோவில் கொண்ட பரம்பொருளும் நீயப்பா
மரத்தாண்ட ஆண்டவா மனமுருகி பாடுகின்றோம்
மகிழ்ந்து எம்மைக் காத்திடுவாய், வளம் எல்லாம் அருளிடுவாய் (மரத்தாண்ட)

கந்தன் என்று சொல்லுவார் கடம்பன் என்று சொல்லுவார்
வேலன் என்று சொல்லுவார் முருகன் என்று சொல்லுவார்
விதவிதமாய் நாமங்களில் போற்றி உன்னை வணங்குவார்
கண்கண்ட தெய்வம் நீ கண் திறந்து பாரப்பா.(மரத்தாண்ட)

மரமாக நின்றாலும் வேலாக நின்றாலும்
தனியாக இருந்தாலும் தம்பதியாய் இருந்தாலும்
தரணியை தழைக்க வைக்கும் தனிப்பெரும் தெய்வமே
தரணி புகழ் வாழ்க்கையை தந்தருள்வாய் வேலவா.(மரத்தாண்ட)

லெ.சக்திகுமார்