முத்துமாரி

அம்மா முத்துமாரி - எங்கள்
அழகு முத்துமாரி
ஆனந்தமாய் வீற்றிருப்பாள்
அன்னை முத்துமாரி


எங்கும் நிறைந்திருப்பாள்
எங்கள் முத்துமாரி
ஏழ்மையைப் போக்கிடுவாள்
அன்னை முத்துமாரி

இன்பத்தைத் தந்திடுவாள்
எங்கள் முத்துமாரி
ஈகையுள்ள தாயவளாம்
அன்னை முத்துமாரி

வேப்பிலைக் காரியவள்
எங்கள் முத்துமாரி
வேண்டும் வரம் தந்திடுவாள்
அன்னை முத்துமாரி

மஞ்சள் முகத்தழகி
எங்கள் முத்துமாரி
மங்காத ஜோதியவள்
அன்னை முத்துமாரி

சமயபுரம் இருப்பவளாம்
எங்கள் முத்துமாரி
குணம் நிறைந்த தாயவளாம்
அன்னை முத்துமாரி