வீரவேல் வெற்றிவேல்

வேல் வேல்

சுட்டதிரு நீறெடுத்துத் தொட்டகையில் வேலேடுத்து
தோகைமயில் மீதமர்ந்த சுந்தரம்-அந்தக்
கட்டழகு கொண்டதொரு கந்தவடி வேலவனைச்
சாற்றுவது ஆறெழுத்து மந்திரம்

ஆறெழுத்து மந்திரத்தைத் தந்ததொரு சுந்தரத்தை
அந்திபகல் சிந்தனைசெய் நெஞ்சமே-அந்த
ஆறெழுந்து மந்திரத்தை யாரெடுத்து ஓதினாலும்
ஆறுமுகம் வந்துநிற்கும் முன்னமே

கந்தனடியே நினைந்து சங்கத்தமிழ் மாலைகொண்டு
வந்தனை செய்வோர்கள் மனம் ஆறுமே-பரங்
குன்றுவளர் குகனோடு தங்கிவரவே நமக்குள்
பொங்கிவரும் செல்வம் பதினாறுமே