அப்பன் பழநி அப்பனடா
சரணம் சரணம் சரணமய்யா-சாமி
சரணம் சரணம் சரணமய்யா!
சரணம் சரணம் சரணமய்யா-சாமி
சரணம் சரணம் சரணமய்யா!
அப்பன் பழநி அப்பனடா-அவன்
அரும் பெரும் திரவியக் கப்பலடா
அற்புதம் காட்டும் தலைவனடா-அவன்
அன்புக்குப் பணிசெய்யும் இறைவனடா!
காண்போம் நாம்அவன் படைவீடு-தம்பி
கால்வலி மறந்து நடைபோடு
கண்டால் நமக்கிலை ஒருகேடு-நீ
காவடி எடுத்து நடமாடு!
வணிகர் குலத்துக்குத் தாயாவான்-அவன்
வளைவினில் ஓடிடும் சேயாவான்!
கவிஞர்கள் பாட்டுக்கு வாயாவான்-எங்கு
கடும்பகை கண்டாலும் தீயாவான்!
ஆண்டிக்குப் பாரடி சாத்துபடி-நாம்
ஆடிடப் பழனியில் தீர்த்தமடி
வேண்டிடும் வரம் தரும் தீபமடி-இதில்
வேதனையே இலை லாபமடி
பழனிக்குப் போவதில் சுகம் அதிகம்-அவன்
பார்வையில் நிற்பதில் குணமதிகம்
விழுந்து வணங்கினால் வயததிகம்-அந்த
வீரன் தருவான் பணமதிகம்.
செட்டிமக்கள் இந்தப் பூமியிலே-பல
தெய்வத்துக் களித்தது கோடியம்மா
கட்டிய கோயில்கள் ஆயிரமே-அதில்
கந்தனின் கோயில்கள் யாவையுமே
முருகப்ப னில்லாத ஊருமில்லை-ஒரு
முத்தப்ப னில்லாத வீடுமில்லை
பழனியப்ப னின்றி வம்சமில்லை-எங்கள்
பரம்பரைக் கவனின்றி அம்சமில்லை
கால்நடைப் பயணத்தில் ஓடிவந்தோம்-உன்
கருணைக்குத் தானுனைத் தேடிவந்தோம்
வேலெமைக் காக்கட்டும் வேலவனே-உன்
விழிஎமைக் காக்கட்டும் நாயகனே.
-கவியரசு கண்ணதாசன்
சரணம் சரணம் சரணமய்யா-சாமி
சரணம் சரணம் சரணமய்யா!
சரணம் சரணம் சரணமய்யா-சாமி
சரணம் சரணம் சரணமய்யா!
அப்பன் பழநி அப்பனடா-அவன்
அரும் பெரும் திரவியக் கப்பலடா
அற்புதம் காட்டும் தலைவனடா-அவன்
அன்புக்குப் பணிசெய்யும் இறைவனடா!
காண்போம் நாம்அவன் படைவீடு-தம்பி
கால்வலி மறந்து நடைபோடு
கண்டால் நமக்கிலை ஒருகேடு-நீ
காவடி எடுத்து நடமாடு!
வணிகர் குலத்துக்குத் தாயாவான்-அவன்
வளைவினில் ஓடிடும் சேயாவான்!
கவிஞர்கள் பாட்டுக்கு வாயாவான்-எங்கு
கடும்பகை கண்டாலும் தீயாவான்!
ஆண்டிக்குப் பாரடி சாத்துபடி-நாம்
ஆடிடப் பழனியில் தீர்த்தமடி
வேண்டிடும் வரம் தரும் தீபமடி-இதில்
வேதனையே இலை லாபமடி
பழனிக்குப் போவதில் சுகம் அதிகம்-அவன்
பார்வையில் நிற்பதில் குணமதிகம்
விழுந்து வணங்கினால் வயததிகம்-அந்த
வீரன் தருவான் பணமதிகம்.
செட்டிமக்கள் இந்தப் பூமியிலே-பல
தெய்வத்துக் களித்தது கோடியம்மா
கட்டிய கோயில்கள் ஆயிரமே-அதில்
கந்தனின் கோயில்கள் யாவையுமே
முருகப்ப னில்லாத ஊருமில்லை-ஒரு
முத்தப்ப னில்லாத வீடுமில்லை
பழனியப்ப னின்றி வம்சமில்லை-எங்கள்
பரம்பரைக் கவனின்றி அம்சமில்லை
கால்நடைப் பயணத்தில் ஓடிவந்தோம்-உன்
கருணைக்குத் தானுனைத் தேடிவந்தோம்
வேலெமைக் காக்கட்டும் வேலவனே-உன்
விழிஎமைக் காக்கட்டும் நாயகனே.
-கவியரசு கண்ணதாசன்