அப்பா அப்பா முருகப்பா
அப்பா அப்பா முருகப்பா
அண்ணன் தம்பிகள் நாமப்பா
சுப்பா சுப்பா வேலப்பா
சொல்வதைக் கொஞ்சம் கேளப்பா
சேவடி சரணம் வேண்டுமென
காவடி தாங்கி வருகின்றோம்
சேவலும் மயிலும் உடனிருக்க
சேர்ந்து இங்கே ஆடப்பா
சீனரும் காவடி ஏந்திவர
சிங்கை நகரே வியந்துநிற்க
சாமரம் வீசிப் பாடுகின்றோம்
சங்கொலி முழங்க ஆடப்பா
வெள்ளிக் கிழமை விளக்கேற்றி
வெள்ளி (இ)ரதத்தில் உனையேற்றி
வேண்டும் அனைத்தையும் தருகின்றோம்
விரைந்து எம்மைப் பாரப்பா
கார்த்திகை வந்தால் உனைக்காண
கால்கள் நோக வருகின்றோம்
காவடி எடுத்தும் வருகின்றோம்
கவலை தீர ஆடப்பா
புனர்பூச நாளில் இரதமேற்றி
பூஜை செய்து வருவோர்க்கு
புள்ளி மயிலின் மீதேறி
புன்னகை நாளும் சிந்தப்பா
நகரத்தார் எல்லாம் கூடியிங்கு
நாளும் உன்னைப் பாடிவர
வேலும் பிடித்து ஆடப்பா
வேட்கை தனிய ஆடப்பா
சஷ்டியில் விரதம் ஏற்கின்றோம்
சண்முகக் கவசம் படிக்கின்றோம்
சந்தனக் காவடி எடுக்கின்றோம்
சங்கடம் தீர்ந்திட ஆடப்பா
பாலரும் காவடி ஏந்திவரப்
பன்னீர்க் காவடி எடுத்துவரப்
பாட்டுப் பாடி ஆடுகின்றோம்
பாவம் போக்க அருளப்பா
VR.பழனியப்பன் (VR.PL)
அப்பா அப்பா முருகப்பா
அண்ணன் தம்பிகள் நாமப்பா
சுப்பா சுப்பா வேலப்பா
சொல்வதைக் கொஞ்சம் கேளப்பா
சேவடி சரணம் வேண்டுமென
காவடி தாங்கி வருகின்றோம்
சேவலும் மயிலும் உடனிருக்க
சேர்ந்து இங்கே ஆடப்பா
சீனரும் காவடி ஏந்திவர
சிங்கை நகரே வியந்துநிற்க
சாமரம் வீசிப் பாடுகின்றோம்
சங்கொலி முழங்க ஆடப்பா
வெள்ளிக் கிழமை விளக்கேற்றி
வெள்ளி (இ)ரதத்தில் உனையேற்றி
வேண்டும் அனைத்தையும் தருகின்றோம்
விரைந்து எம்மைப் பாரப்பா
கார்த்திகை வந்தால் உனைக்காண
கால்கள் நோக வருகின்றோம்
காவடி எடுத்தும் வருகின்றோம்
கவலை தீர ஆடப்பா
புனர்பூச நாளில் இரதமேற்றி
பூஜை செய்து வருவோர்க்கு
புள்ளி மயிலின் மீதேறி
புன்னகை நாளும் சிந்தப்பா
நகரத்தார் எல்லாம் கூடியிங்கு
நாளும் உன்னைப் பாடிவர
வேலும் பிடித்து ஆடப்பா
வேட்கை தனிய ஆடப்பா
சஷ்டியில் விரதம் ஏற்கின்றோம்
சண்முகக் கவசம் படிக்கின்றோம்
சந்தனக் காவடி எடுக்கின்றோம்
சங்கடம் தீர்ந்திட ஆடப்பா
பாலரும் காவடி ஏந்திவரப்
பன்னீர்க் காவடி எடுத்துவரப்
பாட்டுப் பாடி ஆடுகின்றோம்
பாவம் போக்க அருளப்பா
VR.பழனியப்பன் (VR.PL)