அழைக்கட்டுமா அழைக்கட்டுமா!-

அழைக்கட்டுமா
சாமி அழைக்கட்டுமா!-அந்த
ஆறுமுக வேலவனை
அழைக்கட்டுமா!


ஆறுபடை வீட்டோனை அழைக்கட்டுமா!-
சாமி அழைக்கட்டுமா!-அந்த
ஆனைமுகன் தம்பியை
அழைக்கட்டுமா!

இனிய வடிவேலவனை அழைக்கட்டுமா!
சாமி அழைக்கட்டுமா!-அந்த
அந்த இடும்பாயுதனை
அழைக்கட்டுமா!

ஈராறு கையனை அழைக்கட்டுமா!-
சாமி அழைக்கட்டுமா!-அந்த
ஈசனுமை பாலகனை
அழைக்கட்டுமா!

உள்ளங்கவர் கள்வனை அழைக்கட்டுமா!-
சாமி அழைக்கட்டுமா!-அந்த
உல்லாச குமரனை
அழைக்கட்டுமா!

ஊமைக்குபதேசித் தோனை அழைக்கட்டுமா!-
சாமி அழைக்கட்டுமா!-அந்த
ஊனமெல்லாம் அழிப்போனை
அழைக்கட்டுமா!

எட்டுக்குடி வேலவனை அழைக்கட்டுமா!-
சாமி அழைக்கட்டுமா!-அந்த
எங்கும் நிறை இறைவனை
அழைக்கட்டுமா!

ஏறுமயில் வாகனனை அழைக்கட்டுமா!-
சாமி அழைக்கட்டுமா!-அந்த
ஏழைப்பங்காளனை
அழைக்கட்டுமா

ஐங்கரணுக்கிளையவனை அழைக்கட்டுமா!-சாமி
அழைக்கட்டுமா!-அந்த
அன்பர்கள் நேயனை
அழைக்கட்டுமா!

ஒப்பில்லா மணியை அழைக்கட்டுமா!-சாமி
அழைக்கட்டுமா!-அந்த
ஒய்யார நாதனை
அழைக்கட்டுமா!

ஓங்காரப் பொருளோனை அழைக்கட்டுமா!-சாமி
அழைக்கட்டுமா!-அந்த
ஓம் என்ற மந்திரத்தை
அழைக்கட்டுமா!

ஒளவைக்கு உபதேசித்தோனை அழைக்கட்டுமா!-சாமி
அழைக்கட்டுமா!-அந்த
ஆவினன்குடியோனை
அழைக்கட்டுமா!

கண்கண்ட தெய்வத்தை அழைக்கட்டுமா!-சாமி
அழைக்கட்டுமா!-அந்த
கருணைக் கடலை
அழைக்கட்டுமா!

சிங்கார வேலவனை அழைக்கட்டுமா!-சாமி
அழைக்கட்டுமா!-அந்த
சிவகுருநாதனை
அழைக்கட்டுமா!

பக்தர்கள் அனைவரும் அழைக்கட்டுமா!-
சாமி அழைக்கட்டுமா!-அந்த
பழநியம் பதியோனை
அழைக்கட்டுமா!