ஆதிபராசக்தி அம்மா அருள்வாய் தாயே நீ
தேவிபராசக்தி உன்னை தேடி சரண் அடைத்தோம்
அம்மா தேடி சரண் அடைத்தோம்

ஆதிபராசக்தி அம்மா அருள்வாய் தாயே நீ
தேவிபராசக்தி உன்னை தேடி சரண் அடைத்தோம்
அம்மா தேடி சரண் அடைத்தோம்

கஞ்சியிலே நீ காமாட்சி, காசியிலே நீ சாலாட்சி
மதுரையிலே நீ மீனாட்சி, காஞ்சனபுரியில் ஞானாட்சி
கஞ்சியிலே நீ காமாட்சி, காசியிலே நீ சாலாட்சி
மதுரையிலே நீ மீனாட்சி, காஞ்சனபுரியில் ஞானாட்சி

ஆதிபராசக்தி அம்மா அருள்வாய் தாயே நீ
தேவிபராசக்தி உன்னை தேடி சரண் அடைத்தோம்
அம்மா தேடி சரண் அடைத்தோம்

ஆனைமுகனின் அன்னையம்மா, அறுமுகனும் உன் பிள்ளையம்மா
சுடலைநாதனில் பாதியம்மா, சுடலையிலே முழு ஜோதியம்மா

ஆனைமுகனின் அன்னையம்மா, அறுமுகனும் உன் பிள்ளையம்மா
சுடலைநாதனில் பாதியம்மா, சுடலையிலே முழு ஜோதியம்மா

ஆதிபராசக்தி அம்மா அருள்வாய் தாயே நீ
தேவிபராசக்தி உன்னை தேடி சரண் அடைத்தோம்
அம்மா தேடி சரண் அடைத்தோம்

எல்லை இல்லா தொல்லைகளும், தில்லை வந்தால் தீர்ந்துவிடும்
எல்லை காளி சக்தியடி, தில்லை காளி வாடியம்மா

எல்லை இல்லா தொல்லைகளும், தில்லை வந்தால் தீர்ந்துவிடும்
எல்லை காளி சக்தியடி, தில்லை காளி வாடியம்மா

ஆதிபராசக்தி அம்மா அருள்வாய் தாயே நீ
தேவிபராசக்தி உன்னை தேடி சரண் அடைத்தோம்
அம்மா தேடி சரண் அடைத்தோம்

காட்டுத்தீயில் காளியம்மா, வீட்டுத்தீயில் தீபமம்மா
ஏற்றித்தொழுவோர் யாவரையும், போற்றிக்காப்பாய் சக்தியடி

காட்டுத்தீயில் காளியம்மா, வீட்டுத்தீயில் தீபமம்மா
ஏற்றித்தொழுவோர் யாவரையும், போற்றிக்காப்பாய் சக்தியடி

ஆதிபராசக்தி அம்மா அருள்வாய் தாயே நீ
தேவிபராசக்தி உன்னை தேடி சரண் அடைத்தோம்
அம்மா தேடி சரண் அடைத்தோம்

வேப்பிலையில் நீ மாரியடி, கருவேப்பிலையில் நல் வாசமடி
விரும்பினருக்கு அன்னமடி, நெருங்கினவர்க்கு சொந்தமடி

Singer : Somasundaram L, Bangalore

--
Digital Eye,
S Saravanan