ஆனந்தம் தந்தாரே முருகன்

ஆறுமுகத்தாலே முருகனே ஆனந்தம் தந்தாரே
அஞ்சவேண்டாம் நானிருக்கையில் என்று சொன்னாரே


சிங்கார வேலவன்
சின்னஞ்சிறு பாலனவன்
சிந்தியினைக் கவர்ந்துவிட்டான் - இப்போது
என் சிந்தையினைக் கவர்ந்துவிட்டான் இப்போது(ஆறு)

குன்றக்குடி பாலனவன்
குறைகளினைத் தீர்த்திடுவான்
கும்பிட்டு நாம்மகிழ்வோம் - என்றென்றும்
அவனைக் கும்பிட்டு நாம் மகிழ்வோம் என்றென்றும்(ஆறு)

தினம் தினமும் துதிக்கின்றேன்
உன் திருவடியை நினைக்கிறேன்
அவனியிலே அவனுக்கிணை தானேது-இந்த
அவனியிலே அவனுக்கிணை தானேது(ஆறு)

குன்று தோரும் ஆடிடுவான்
குலம் என்றும் காத்திடுவேன்
என்றும் நன்மை செய்யின்
தீமை வராதென்றாரே(ஆறு)

அன்னையின் கனவுகளெல்லாம்
சிதறாமல் தவறாமல்
சிங்கார வேலனவன்
சீக்கிரமே நனவாக்கிடுவான்(ஆறு)