ஆறுமுகம் ஓடிவருக!
அரோகரா
ஆனைமுக வாயும்மை அனுதினம் நம்பினேன்
ஐங்கரன் ஓடிவருக
ஆறுமுக சுவாமியின் பேரினில் கதைபாட
அன்புடனே ஓடி வருக
சதுரமனை பிரம்மனும் அன்னவாகன மேறி
சரஸ்வதியுடன் வருக வருக
பரமனும் பார்வதி சிவபகவான் மேறிய
பண்புடன் வருக வருக
சேவிசயனத்தில் ரெங்கரும் அலமேலு மங்கையும்
சீக்கிரம் வருக வருக
தசரதர் புத்திரர் பரிராமர் லெஷ்மணர்
சீதையுடன் வருக வருக
கெருட வாகனமேரும் ராதா ருக்மணியுடன்
கிருஷ்ணனும் வருக வருக
சிங்க வாகனமேரும் சிங்கள நாச்சியம்மனும்
வினத்தில் வருக வருக!
சிங்கம்புணரி வாழ் சேவுக மூர்த்தியே
சீக்கிரம் வருக வருக
அங்கேயே குடியிருக்கும் எங்கள் பொன் தேவதையும்
அருகினில் வருக வருக
செகுட்டையனாரும் சேவுகப்பெருமானும் என்
முன்னமே வருக வருக
அண்ணனும் தம்பியும் அழகான புரவிஏறியே
யந்திரங்க வருக வருக
சொக்கநாதர் வாழுகின்ற சோனைக்கருப்பரும்
ஐயனாரும் வருக வருக
கள்ளிச்சி காளியும் கருப்பனோடு முன்னோடி
கூடவே வருக வருக
மந்தையிலே குடியிருக்கும் எங்கள்
மாரியும் வருக வருக
சிந்தையிலே வீற்றிருக்கும் சிவசொக்கரும்
துணையுடன் வருக வருக
மொட்டை அம்மனும் முண்டகக் கன்னியும்
கைகோர்த்து ஆடி வருக வருக
கோட்டையம்மனும் கொப்புடை அம்மனும்
கூடவே வருக வருக
வலங்கையில் குடியிருக்கும் பாடைகட்டி
மாரியும் வருக வருக
சலங்கை ஒலி கேட்கவே சந்தனமாரியும்
சடுதியில் வருக வருக
கண்ணையே காக்கின்ற கண்ணாத்தாள்
தாயும் வருக வருக
புஷ்பச் சீவிகையின் மீதினில் விளங்கும்
அம்பாளும் மாரியும் அருகினில் வருக வருக
அக்கின பானத்தை அதிரவே பொடி செய்யும் அன்னை
காமாட்சி வருக வருக
அஷ்டிதிக்கிலுள்ள துஷ்டரை அதம் செய்யும்
அங்காளி அம்மன் வருக வருக
முப்பத்து முக்கோடி தேவர்கள் முனிவர்கள்
என் முன்னமே வருக வருக
நாற்பத் தொன்னாயிரம் ரிஷிகளும் முனிவரும்
நடனப் பென்னாடி வருக வருக
எமதர்மராஜனும் எருது மேலேறியே
என் முன்னமே வருக
ஆனை வாகனம் அமரும் ஐயனாரும், முனிவரும்
ஆடியே வருக வருக!
இத்தனை பேர்களும் இங்கு வந்திருக்கையில் ஏனோ
ஆறுமுகம் வரவேயில்லை
எங்கேயோ ஞாபகம் எவ்விடத்தில் சிந்தையோ
என்மேல் மனஸ்தாபமோதான்
நாலைந்து வருடமாய் நித்திரை இல்லையே
நாதனைப் பார்க்க வேண்டி
அன்னம் புசிக்கலை தண்ணீர் குடிக்கலை
நற்சுகம் பெறவேயில்லை
வருகிறார் வருகிறார் வருகிறார் வருகிறார்
வண்ணமயிலேறியே கந்தன்
சங்கு நாதங்களும் எங்கேயோ கேட்குதே
சண்முகம் வருவதாக
காலினில் வெண்டயம் கலகலவென தண்டையும்
கணகமணி சத்தத்தோடு
காவியுடை யனிந்து கவச குண்டல மணிந்து
காண மயிலேறி கந்தன்
கடம்பனொரு காவடி இடும்பனொரு காவடி
கானாத லட்சம் கோடி
கண்டவர்கள் பாடவும் கைகொட்டி ஆடவும் கந்தவேல் நின்றாடவும்
கடம்பவனத்தை அதம் செய்த ஐயனே
கதிர் கொடுத்து நீயும்
கடகடென மயிலேறி வள்ளி தெய்வானையுடன்
வருவாய் கதிர்காமவேல் முருகனே
அடிபடுது அடிபடுது மேலதாளங்கலும் றுமுகம் வருவதாக
இடிபடுது இடிபடுது மத்தளம் பேரிகை
எமலோகம் கிடுகிடுங்க
மயில் வருது மயில் விருதுமன்ன ருடை
வாகனம் திடுதிடுக்க
வேல்மருது வேல் வருது வீரகண்டாமணி
விண்ணுலகம் நடுநடுங்க
அதிர்வேட்டு பீரங்கி அசுரவே விழுகுது
அமரலோகம் கிடுகிடுங்க
திருதாமரை சங்குநாதம் சத்தமும் பொழியுது
சிவலோகம் நடுநடுங்க
பிசாசுகள் பிணிகளும் பேரலினென்றோடுது
பீரங்கி சத்தம் கேட்டு
வேதாளம் பேதாளம் பூதமும் ஆடுது
வேட்டுடை வோசை கேட்டு
கதறுகிறேன் பதறுகிறேன் ஓலமிட்டழுகிறேன்
கந்தனே கண் திறந்து
கடகடென மயிலேறி வள்ளி தெய்வானையுடன்
வருகுவாய் கதிர்காம வேல்முருகனே
ஈசன் மகிழ்பொதிகை முனிக்குருவுவாகி
ஈராறு கையினில் வேலுமேந்தி
பாசமுடன் மயிலேறி அசுரரைவென்று பண்பான
அமருடை துயரம் தீர்த்து கவி நான்சொல்ல தேசினார் கதிர்காம வேலவர்
மீதில் தீர்க்கமுள்ள மாசில்லா பரஞ்சோதி ஒன்றைக் கொம்பன்
மலரடியை அனுதினமும் வணங்குகிறேனே.
-இயற்றியவர்: புலவர்கந்ததாசன்
அரோகரா
ஆனைமுக வாயும்மை அனுதினம் நம்பினேன்
ஐங்கரன் ஓடிவருக
ஆறுமுக சுவாமியின் பேரினில் கதைபாட
அன்புடனே ஓடி வருக
சதுரமனை பிரம்மனும் அன்னவாகன மேறி
சரஸ்வதியுடன் வருக வருக
பரமனும் பார்வதி சிவபகவான் மேறிய
பண்புடன் வருக வருக
சேவிசயனத்தில் ரெங்கரும் அலமேலு மங்கையும்
சீக்கிரம் வருக வருக
தசரதர் புத்திரர் பரிராமர் லெஷ்மணர்
சீதையுடன் வருக வருக
கெருட வாகனமேரும் ராதா ருக்மணியுடன்
கிருஷ்ணனும் வருக வருக
சிங்க வாகனமேரும் சிங்கள நாச்சியம்மனும்
வினத்தில் வருக வருக!
சிங்கம்புணரி வாழ் சேவுக மூர்த்தியே
சீக்கிரம் வருக வருக
அங்கேயே குடியிருக்கும் எங்கள் பொன் தேவதையும்
அருகினில் வருக வருக
செகுட்டையனாரும் சேவுகப்பெருமானும் என்
முன்னமே வருக வருக
அண்ணனும் தம்பியும் அழகான புரவிஏறியே
யந்திரங்க வருக வருக
சொக்கநாதர் வாழுகின்ற சோனைக்கருப்பரும்
ஐயனாரும் வருக வருக
கள்ளிச்சி காளியும் கருப்பனோடு முன்னோடி
கூடவே வருக வருக
மந்தையிலே குடியிருக்கும் எங்கள்
மாரியும் வருக வருக
சிந்தையிலே வீற்றிருக்கும் சிவசொக்கரும்
துணையுடன் வருக வருக
மொட்டை அம்மனும் முண்டகக் கன்னியும்
கைகோர்த்து ஆடி வருக வருக
கோட்டையம்மனும் கொப்புடை அம்மனும்
கூடவே வருக வருக
வலங்கையில் குடியிருக்கும் பாடைகட்டி
மாரியும் வருக வருக
சலங்கை ஒலி கேட்கவே சந்தனமாரியும்
சடுதியில் வருக வருக
கண்ணையே காக்கின்ற கண்ணாத்தாள்
தாயும் வருக வருக
புஷ்பச் சீவிகையின் மீதினில் விளங்கும்
அம்பாளும் மாரியும் அருகினில் வருக வருக
அக்கின பானத்தை அதிரவே பொடி செய்யும் அன்னை
காமாட்சி வருக வருக
அஷ்டிதிக்கிலுள்ள துஷ்டரை அதம் செய்யும்
அங்காளி அம்மன் வருக வருக
முப்பத்து முக்கோடி தேவர்கள் முனிவர்கள்
என் முன்னமே வருக வருக
நாற்பத் தொன்னாயிரம் ரிஷிகளும் முனிவரும்
நடனப் பென்னாடி வருக வருக
எமதர்மராஜனும் எருது மேலேறியே
என் முன்னமே வருக
ஆனை வாகனம் அமரும் ஐயனாரும், முனிவரும்
ஆடியே வருக வருக!
இத்தனை பேர்களும் இங்கு வந்திருக்கையில் ஏனோ
ஆறுமுகம் வரவேயில்லை
எங்கேயோ ஞாபகம் எவ்விடத்தில் சிந்தையோ
என்மேல் மனஸ்தாபமோதான்
நாலைந்து வருடமாய் நித்திரை இல்லையே
நாதனைப் பார்க்க வேண்டி
அன்னம் புசிக்கலை தண்ணீர் குடிக்கலை
நற்சுகம் பெறவேயில்லை
வருகிறார் வருகிறார் வருகிறார் வருகிறார்
வண்ணமயிலேறியே கந்தன்
சங்கு நாதங்களும் எங்கேயோ கேட்குதே
சண்முகம் வருவதாக
காலினில் வெண்டயம் கலகலவென தண்டையும்
கணகமணி சத்தத்தோடு
காவியுடை யனிந்து கவச குண்டல மணிந்து
காண மயிலேறி கந்தன்
கடம்பனொரு காவடி இடும்பனொரு காவடி
கானாத லட்சம் கோடி
கண்டவர்கள் பாடவும் கைகொட்டி ஆடவும் கந்தவேல் நின்றாடவும்
கடம்பவனத்தை அதம் செய்த ஐயனே
கதிர் கொடுத்து நீயும்
கடகடென மயிலேறி வள்ளி தெய்வானையுடன்
வருவாய் கதிர்காமவேல் முருகனே
அடிபடுது அடிபடுது மேலதாளங்கலும் றுமுகம் வருவதாக
இடிபடுது இடிபடுது மத்தளம் பேரிகை
எமலோகம் கிடுகிடுங்க
மயில் வருது மயில் விருதுமன்ன ருடை
வாகனம் திடுதிடுக்க
வேல்மருது வேல் வருது வீரகண்டாமணி
விண்ணுலகம் நடுநடுங்க
அதிர்வேட்டு பீரங்கி அசுரவே விழுகுது
அமரலோகம் கிடுகிடுங்க
திருதாமரை சங்குநாதம் சத்தமும் பொழியுது
சிவலோகம் நடுநடுங்க
பிசாசுகள் பிணிகளும் பேரலினென்றோடுது
பீரங்கி சத்தம் கேட்டு
வேதாளம் பேதாளம் பூதமும் ஆடுது
வேட்டுடை வோசை கேட்டு
கதறுகிறேன் பதறுகிறேன் ஓலமிட்டழுகிறேன்
கந்தனே கண் திறந்து
கடகடென மயிலேறி வள்ளி தெய்வானையுடன்
வருகுவாய் கதிர்காம வேல்முருகனே
ஈசன் மகிழ்பொதிகை முனிக்குருவுவாகி
ஈராறு கையினில் வேலுமேந்தி
பாசமுடன் மயிலேறி அசுரரைவென்று பண்பான
அமருடை துயரம் தீர்த்து கவி நான்சொல்ல தேசினார் கதிர்காம வேலவர்
மீதில் தீர்க்கமுள்ள மாசில்லா பரஞ்சோதி ஒன்றைக் கொம்பன்
மலரடியை அனுதினமும் வணங்குகிறேனே.
-இயற்றியவர்: புலவர்கந்ததாசன்