உறையூர் ஸ்ரீ வெக்காளி அம்மன்

ஓம் சக்தி! ஓம் சக்தி! ஓம் சக்தி! ஓம்!
ஓம் சக்தி! ஓம் சக்தி! ஓம் சக்தி! ஓம்!


கூரைதான்வேண்டாது,
கொலுவீற்றிருக்கும்தாயே!
கூப்பிட்டகுரலுக்குவந்து
குறைதீர்ப்பவள்நீயே!

வீசிடும்கண்பார்வையில்
வீழ்ந்திடும்பகையெல்லாம்.
வெக்காளிஉன்அருளால்,
விளைந்திடும்நன்மையெல்லாம்.

எலுமிச்சம்பழம்தன்னில்
ஏற்றிவைக்கும்விளக்கினிலே
சுடராகநீஇருப்பாய்,
இடர்தீர்க்கும்காளியே!

சிவபெருமான்சீற்றத்தால்,
மணல்மாரிபொழிந்ததையும்,
சினம்கொண்டஉக்கிரத்தால்
தினம்வந்தவெக்கையையும்

தாயாகிசாந்தமுடன்வந்ததிங்கு,
தன்மீதுதாங்கிக்கொண்டு
உறையூரைக்குளிர்வித்த
உத்தமநல்காளியே!

மனதில்உள்ளவேண்;டுதலை
மனமொன்றிஎழுதிவிட்டால்,
காகிதத்தில்உள்ளதைக்
காரியத்தில்செயலாக்கும்காளியே!

உலகத்தைஆள்கின்ற
ஒரேசக்திஎன்றும்நீயே!
உள்ளத்தில்கபடமதைஒழிப்பாயே
உறையூரில்குடிகொண்டகாளியே!

ஆணவம்புறமுதுகிட்டோடிட
ஆரவாரம்அடங்கிப்போக
பேரருளாய்வரம்தந்து
பெயர்விளங்கவைக்கும்காளியே!

சித.அருணாசலம்.