உலகாளும் மகாசக்தி
ராஜேஸ்வரி-அம்மா-பரமேஸ்வரி
புவனேஸ்வரி-அம்மா-ஜகதீஸ்வரி
ஸ்ரீசக்ர பீடத்தில் ராஜேஸ்வரி
சிவசக்தி ரூபத்தில் பரமேஸ்வரி
ஓம்சக்தி ஓம்சக்தி புவனேஸ்வரி
உலகாளும் மாசக்தி ஜகதீஸ்வரி!
அருளாளர் நெஞ்சங்கள் சிம்மாசனம்
அறுபத்து நான்குகலை வெண்சாமரம்
ஒருநான்கு வேதங்கள் சங்கீர்த்தனம்
ஓங்காரநாதம் அம்மாஉன் தாண்டவம்!
பூவுக்கும் பொட்டுக்கும் துணையானவள்
பொன்மஞ்சள் குங்குமத்தில் நிலையானவள்
சேவிக்கும் பெண்களுக்குத் தாயானவள்
திருமாங்கல்யம் என்னும் வாழ்வானவள்!
குளம்போல நெய்யூற்றி விளக்கேற்றுவோம்
கும்பத்தின் பிம்பத்தில் குடியேற்றுவோம்
வளம்யாவும் தரவேண்டி மலர்தூவுவோம்
மகராணி நீயென்று கவிபாடுவோம்!
தீபத்தில் குடிகொண்ட ராஜேஸ்வரி
திலகத்தில் முகம்காட்டும் ராஜேஸ்வரி
ஆபத்தில் ஓடிவரும் ராஜேஸ்வரி
அருள்செய்ய வேண்டும் அம்மா நீயேகதி!
-அருட்கவி கு.செ.இராமசாமி
ராஜேஸ்வரி-அம்மா-பரமேஸ்வரி
புவனேஸ்வரி-அம்மா-ஜகதீஸ்வரி
ஸ்ரீசக்ர பீடத்தில் ராஜேஸ்வரி
சிவசக்தி ரூபத்தில் பரமேஸ்வரி
ஓம்சக்தி ஓம்சக்தி புவனேஸ்வரி
உலகாளும் மாசக்தி ஜகதீஸ்வரி!
அருளாளர் நெஞ்சங்கள் சிம்மாசனம்
அறுபத்து நான்குகலை வெண்சாமரம்
ஒருநான்கு வேதங்கள் சங்கீர்த்தனம்
ஓங்காரநாதம் அம்மாஉன் தாண்டவம்!
பூவுக்கும் பொட்டுக்கும் துணையானவள்
பொன்மஞ்சள் குங்குமத்தில் நிலையானவள்
சேவிக்கும் பெண்களுக்குத் தாயானவள்
திருமாங்கல்யம் என்னும் வாழ்வானவள்!
குளம்போல நெய்யூற்றி விளக்கேற்றுவோம்
கும்பத்தின் பிம்பத்தில் குடியேற்றுவோம்
வளம்யாவும் தரவேண்டி மலர்தூவுவோம்
மகராணி நீயென்று கவிபாடுவோம்!
தீபத்தில் குடிகொண்ட ராஜேஸ்வரி
திலகத்தில் முகம்காட்டும் ராஜேஸ்வரி
ஆபத்தில் ஓடிவரும் ராஜேஸ்வரி
அருள்செய்ய வேண்டும் அம்மா நீயேகதி!
-அருட்கவி கு.செ.இராமசாமி