எல்லாமுண்டு
முருகா முருகா வேல் முருகா
முருகா முருகா வேல் முருகா
அன்பு செயச் சக்தியெனும் அன்னையுண்டு
ஆலமுண்ட கண்டனெனும் தந்தையுண்டு
தன் வயிறு சாயவரும் அண்ண னுண்டு
சாரங்க பாணியெனும் மாம னுண்டு
ஆடகத்தில் செய்ததொரு தேருமுண்டு
அழகு மிகு தோரணங்கள் யாவுமுண்டு
ஆடிவரத் தோகை மயில் தானுமுண்டு
ஆதிசக்தி தந்ததொரு வேலுமுண்டு
கட்டியங்கள் கூவி வரச் சேவ லுண்டு
கடம்பனுடன் இடும்பனுமே காவலுண்டு
கட்டி வருங் காவடிகள் ஆடலுண்டு
கறந்த பசும் பாற்குடங்கள் கூடவுண்டு
பார்புகழும் ஆறுபடை வீடும் உண்டு
பட்டாடை ஆபரணங் கோடியுண்டு
மார்பினிலே கடப்ப மலர் மாலையுண்டு
மணியினையும் செஞ்சதங்கை காலிலுண்டு
வள்ளிமயில் தெய்வானை கொஞ்சலுண்டு
மலைவண்ண எங்கெங்கும் மஞ்சமுண்டு
உள்ளுருகி அடியவர்கள் கெஞ்சலுண்டு
உனையென்றும் மறவாத நெஞ்சுமுண்டு
சேவற் கொடி கொண்டவடி வேலனுக்கு
தேவையான யாவுமுண்டு என்று சொல்லும்
சேவுகனின் கவியெடுத்துப் பாடி வருவார்
சிங்கார வேலனருள் நாளும் பெறுவார்
-மீ. சேவுகஞ் செட்டி
முருகா முருகா வேல் முருகா
முருகா முருகா வேல் முருகா
அன்பு செயச் சக்தியெனும் அன்னையுண்டு
ஆலமுண்ட கண்டனெனும் தந்தையுண்டு
தன் வயிறு சாயவரும் அண்ண னுண்டு
சாரங்க பாணியெனும் மாம னுண்டு
ஆடகத்தில் செய்ததொரு தேருமுண்டு
அழகு மிகு தோரணங்கள் யாவுமுண்டு
ஆடிவரத் தோகை மயில் தானுமுண்டு
ஆதிசக்தி தந்ததொரு வேலுமுண்டு
கட்டியங்கள் கூவி வரச் சேவ லுண்டு
கடம்பனுடன் இடும்பனுமே காவலுண்டு
கட்டி வருங் காவடிகள் ஆடலுண்டு
கறந்த பசும் பாற்குடங்கள் கூடவுண்டு
பார்புகழும் ஆறுபடை வீடும் உண்டு
பட்டாடை ஆபரணங் கோடியுண்டு
மார்பினிலே கடப்ப மலர் மாலையுண்டு
மணியினையும் செஞ்சதங்கை காலிலுண்டு
வள்ளிமயில் தெய்வானை கொஞ்சலுண்டு
மலைவண்ண எங்கெங்கும் மஞ்சமுண்டு
உள்ளுருகி அடியவர்கள் கெஞ்சலுண்டு
உனையென்றும் மறவாத நெஞ்சுமுண்டு
சேவற் கொடி கொண்டவடி வேலனுக்கு
தேவையான யாவுமுண்டு என்று சொல்லும்
சேவுகனின் கவியெடுத்துப் பாடி வருவார்
சிங்கார வேலனருள் நாளும் பெறுவார்
-மீ. சேவுகஞ் செட்டி