ஓம் முருகா ஓம் ஓம்

ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் ஓம்
ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் ஓம்


தேவியை மணந்த இடம் பரங்கிரியாம் தேசம்
அது தேவ கைலாசம் _ அங்கு
சிறக்குதையா மார்பினிலே செண்பகத்தின் வாசம்

கந்தனவன் வென்ற இடம் கடல்பாடும் தேசம்
அது கருணைக் கைலாசம் _ அங்கு
கமழுதையா மார்பினிலே கடம்பமலர் வாசம்

பழத்துக்காகப் போட்டியிட்டது தென்பழனி தேசம்
அது பக்தர் கைலாசம் _ அங்கு
பகட்டுதய்யா மார்பினிலே பாரிஜாத வாசம்

ஆசானாய் வந்த இடம் சுவாமிமலை தேசம்
அது அறிவுக் கைலாசம் _ அங்கு
அடிக்குதய்யா மார்பினிலே அல்லிமலர் வாசம்

குன்று தோராடுவது குமரனது தேசம்
அது கோடிக் கைலாசம் _ அங்கு
கொஞ்சுதய்யா மார்பினிலே குறிஞ்சிமலர் வாசம்