கருவிலே நான் தூங்கி காலங் கழிக்கையில்

ஓம் சக்தி! ஓம் சக்தி! ஓம் சக்தி! ஓம்!
ஓம் சக்தி! ஓம் சக்தி! ஓம் சக்தி! ஓம்!



கருவிலே நான் தூங்கி காலங் கழிக்கையில்
காற்றாக வந்தவள் நீ
கையிலே பிள்ளையாய் பைய்யகிடக்கையில்
கனிந்தபால் ஆனவள் நீ

உருவிலே பெரிதாகி பள்ளிக்கு செல்கையில்
உடன் வந்த கல்வியும் நீ
உறவிலே ஒன்றாகி திருமணம் நடக்கையில்
ஒளி மாலையானவள் நீ

திருவோடு பிள்ளைமனையில் பிறக்கையில்
சீர்தந்த ஆட்சியும் நீ
தேசங்கள் யாவிலும் தொழில் செய்யசெல்கையில்
செல்வமாய் நின்றவள் நீ

குருவான குமரனின் அறிவான அன்னையே
கோலநடராஜன் துணையே
கோவிலிடை அந்தனர் கூடிவரும் தில்லையில்
கொஞ்சும் சிவகாமி உமையே