கவலையைத் தீர்க்கும் கடவுள்

அரோகரா

ஆர் ஆர் இருக்கினும் என் கவலை மாற்றுவது
ஆறுமுகக் கடவுள் என்று
அவனிமுதல் ஐம்பத்து அறுகாத தேசமும்
அறியாதவரும் உண்டோ
ஈராறுகையனே இருமூன்று முடியனே
இனியகனி வாய் அழகனே
எட்டு எட்டு அறுபத்து நாலான தோளனே
ஏக கண போகமான
கார் ஆறும் மேனிகரிமுகனுக்கு இளையனே
கழுகாசல ஆறுமுகனே
கற்றறிஉற்றனே சித்தப்ர சித்தனே
கந்தப்பன் ஆதி தேவே
தார் ஆறும் ஐயனே துய்யனே ஐயனே
சரிசரி வரவேணுமே
தரணிதனில் மயில் மீதில் விளையாடி வருகின்ற
சண்முகக் குமர குருவே