குன்றக்குடி குமரன்

அரோகரா

மன்றாடி ஈன்றமகன் குன்றக்குடி முருகன்
மலைமீது நிற்கின்றானே
மன்றாடி நாமவனைக் கொண்டாடி வழிபட்டால்
மடிமீது நிற்பான் தானே
நின்றாடி வணங்கிடுவோம் நிதம் அவனைத் தொழுதிடுவோம்
நீங்கிவிடும் துயர மெல்லாம்
நீலமயில் ஏறிவரும் பாலகனைத் துதித்திடுவோம்
நிதம் நமது வாழ்க்கை எல்லாம்
குன்றாடி வரும் வேலா குன்றக்குடி பாலா
குழந்தை வடிவேலா வா! வா!
குறையெல்லாம் போக்கி நிதம் கோபுரமாய் வளங்களெல்லாம்
குறையாமல் தருக வா! வா!
இன்றோடி வருகின்றோம் இருமாதர் புடைசூழ
எழுந்தோடி விரைந்து வருவாய்
இன்றோடு துயரெல்லாம் எமைவிட்டு அகன்றுவிட
இருவிழியால் வரங்கள் தருவாய்


-கவிஞர் மா. கண்ணப்பன்