குன்று தோறும் ஆடும் குமரன்

குன்று தோறும் ஆடும் குமரனே
குலமெல்லாம் காப்பாய் கந்தனே


ஆதிபராசக்தி மைந்தனே-எங்கள்
ஆனந்த ஈசனின் நேசனே
வாடும் பக்தர்குறை தீர்க்கவே
வரமளிக்க வேணும் வேலனே.(குன்று)

பாரெல்லாம் ஆளும் அரசனே-எங்கள்
பாவங்கள் போக்கணும் பாலனே
பஞ்சம் பிணி தீர்க்கவே உன்னையே
பாதம் பணிந்திட்டோம் நம்பியே(குன்று)

காவடி ஆட்டத்தின் ரசிகனே
கவலையெல்லாம் போக்கணும் கந்தனே
காண்பவர் மனத்தினை என்றுமே
காந்தமாய் இழுக்கின்ற வேந்தனே(குன்று)

தேவாதி தேவ தேவனே
தேவ சேனையின் தலைவனே
தேம்பி அழும் எங்களை
தேற்ற வருவாய் தேவனே(குன்று)

ஆறுமுகம் கொண்ட அழகனே
அழகான் தமிழ்தந்த தலைவனே
தமிழாலே அழைக்கிறோம் உம்மையே
ஆதரித்து காப்பாய் எம்மையே(குன்று)

வெள்ளிப்பணத்தில் கொண்ட ஆசையால்
கடல்கடந்து வேலைக்கு வந்தோமே
பிரிவால் குடும்பம் தவிக்குதே
உன்னருளால் ஒன்று சேர்த்திடுவாய்(குன்று)

கண. மாணிக்கம், காரைக்குடி.