சிங்கை நகர் முருகனே வருக

அரோகரா

சிக்கலைத் தீர்க்கின்ற சிங்கைநகர் முருகனே
சீக்கிரம் வருக வருக!
எக்கலைக்கும் மன்னனா எம்தலைவன் முருகனே
எழுந்தோடி வருக வருக!

இஷ்டமாய் வணங்குவோர், இல்லறம் செழித்திட
இருமாதர்புடைசூழ வருக வருக!
கஷ்டமென வந்தவரின் கதறலை நிறுத்திட
கணப்பொழுதில் வருக வருக!

நாட்டமுடன் நகரத்தார் ஏற்றம்பல கண்டிட
ஏறுமயிலேறி வருக வருக!
பாட்டமுதைத் தருவோரின் பார்வையில் நின்றிட
பறந்தோடி வருக வருக!

விழிநீரால் வணங்குவோர், வேதனையைத் தீர்த்திட
வெள்ளிரதமேறி வருக வருக!
வழிவழியாய் வம்சங்கள் வளர்ந்தோங்கியே வாழ்ந்திட
வடிவேலேந்தி வருக வருக!

வி.ஆர்.பழனியப்பன்