சிங்கை முருகன் சிறப்பு
முருகா முருகா வேல் முருகா
முருகா முருகா வேல் முருகா
வேண்டும் வரம் தருவதில்வல்லவனாம்
தண்டாயுதபாணி எங்கள்மன்னவனாம்
கண்டவுடன் காதல் கொள்ளும்உன் அழகை
கண்டிடவே நாங்கள் கிளம்பிவந்தோம்-முருகா
மாதந்தோறும் கார்த்திகைஉன் திருநாள்
பாதையிலே பக்தர் கூட்டம்கூடி நிற்கும்
மேளங்களின் மங்கள இசையுடனே
ஆலயத்தைச் சுற்றியே நீவருவாய்-முருகா
தங்கரதம் ஏறியே ஒயிலாக
புனர்பூச நாளதனில்புறப்படுவாய்
போற்றிடும் பக்தரைக் காணநீயும்
சுற்றிட ரதமேறிகிளம்பிடுவாய்-முருகா
அண்ணன் அவன் ஆலயத்தில்ஆரம்பித்து
அன்னை அவள் வாசலிலே ஆசிபெற்று
மன்னன் அவன் நகர்வலம்வருமழகை
காண கண்கள் கோடிவேண்டுமப்பா-முருகா
வேலன் செல்லும் பாதையிலேஇடர் வராமல்
சாலை செல்லும் வாகனங்கள்மாறிவிட
காவலர்கள் சிறப்புடன்பாதை தரவே
கந்தன் செல்லும் பேரழகைகாணுங்களேன்-முருகா
சட்ட திட்டம் போற்றுகின்றசிங்கை நகரில்
வட்டமிட்டு சுற்றி வரும்கந்தவேளே
ஆட்டத்துடன் காவடிகள் ஆடிவரவே
பாட்டிசைத்து உமை நாம்பாடிவருவோம்-முருகா
தைப்பூச நாளதுவும்வந்துவிட்டால்
பாசத்துடன் மக்கள் கூட்டம்பெருக்கெடுக்கும்
படைபோன்ற அன்பர்களின் உழைப்பாலே
தடையின்றி அன்னதானம்நடந்திடுமே-முருகா
சொல்லெடுத்து உனையேபாடிடுவோம்
கால்கடுத்து உனையேகாணவருவோம்
வேளையிது வேலமுருகன்வந்திடுவாய்
வேலெடுத்து என்றும் எம்மைகாத்திடுவாய்-முருகா
-அழகுசுந்தரம்
முருகா முருகா வேல் முருகா
முருகா முருகா வேல் முருகா
வேண்டும் வரம் தருவதில்வல்லவனாம்
தண்டாயுதபாணி எங்கள்மன்னவனாம்
கண்டவுடன் காதல் கொள்ளும்உன் அழகை
கண்டிடவே நாங்கள் கிளம்பிவந்தோம்-முருகா
மாதந்தோறும் கார்த்திகைஉன் திருநாள்
பாதையிலே பக்தர் கூட்டம்கூடி நிற்கும்
மேளங்களின் மங்கள இசையுடனே
ஆலயத்தைச் சுற்றியே நீவருவாய்-முருகா
தங்கரதம் ஏறியே ஒயிலாக
புனர்பூச நாளதனில்புறப்படுவாய்
போற்றிடும் பக்தரைக் காணநீயும்
சுற்றிட ரதமேறிகிளம்பிடுவாய்-முருகா
அண்ணன் அவன் ஆலயத்தில்ஆரம்பித்து
அன்னை அவள் வாசலிலே ஆசிபெற்று
மன்னன் அவன் நகர்வலம்வருமழகை
காண கண்கள் கோடிவேண்டுமப்பா-முருகா
வேலன் செல்லும் பாதையிலேஇடர் வராமல்
சாலை செல்லும் வாகனங்கள்மாறிவிட
காவலர்கள் சிறப்புடன்பாதை தரவே
கந்தன் செல்லும் பேரழகைகாணுங்களேன்-முருகா
சட்ட திட்டம் போற்றுகின்றசிங்கை நகரில்
வட்டமிட்டு சுற்றி வரும்கந்தவேளே
ஆட்டத்துடன் காவடிகள் ஆடிவரவே
பாட்டிசைத்து உமை நாம்பாடிவருவோம்-முருகா
தைப்பூச நாளதுவும்வந்துவிட்டால்
பாசத்துடன் மக்கள் கூட்டம்பெருக்கெடுக்கும்
படைபோன்ற அன்பர்களின் உழைப்பாலே
தடையின்றி அன்னதானம்நடந்திடுமே-முருகா
சொல்லெடுத்து உனையேபாடிடுவோம்
கால்கடுத்து உனையேகாணவருவோம்
வேளையிது வேலமுருகன்வந்திடுவாய்
வேலெடுத்து என்றும் எம்மைகாத்திடுவாய்-முருகா
-அழகுசுந்தரம்