சொல்ல சொல்ல இனிக்குதடா முருகா
உள்ளமெல்லாம் உன் பெயரை
சொல்ல சொல்ல இனிக்குதடா முருகா
உள்ளமெல்லாம் உன் பெயரை

பிள்ளை பிராயத்திலே
பெரிய பெயர் பெற்றவனே
உள்ளமெல்லாம் உன் பெயரை

சொல்ல சொல்ல இனிக்குதடா முருகா
உள்ளமெல்லாம் உன் பெயரை

பிறந்தபோது எனது நெஞ்சு
அமைதி கொண்டது - முருகா
அமைதி கொண்டது
அறிவில் சிறந்த உன்னை
காணும்போது பெருமை கொண்டது - கந்தா
பெருமை கொண்டது.. முருகா

சொல்ல சொல்ல இனிக்குதடா முருகா
உள்ளமெல்லாம் உன் பெயரை

உலகில் ஆடும் தொட்டில் எல்லாம்
உன் பெயர் பாடும்
உண்மை பேசும் மொழிகள் எல்லாம்
உன் புகழ் பேசும்
யுகங்கள் எல்லாம் மாறி மாறி
சந்திக்கும்போது - உன்
முக மலரின் அழகில் மட்டும்
முதுமை வராது - கந்தா
முதுமை வராது .. குமரா

சொல்ல சொல்ல இனிக்குதடா முருகா
உள்ளமெல்லாம் உன் பெயரை

முருகன் என்றால் அழகன் என்று
தமிழ் மொழி கூறும்
அழகன் எந்தன் குமரன் என்று
மனமொழி கூறும்
உயிரினங்கள் ஒன்றை ஒன்று
வாழ்த்திடும்போது
அதன் உள்ளிருந்து வாழ்த்துவது
உன் அருளன்றோ - கந்தா
உன் அருளன்றோ - முருகா

சொல்ல சொல்ல இனிக்குதடா முருகா
உள்ளமெல்லாம் உன் பெயரைää