திருமகள் அருள் வேண்டல்
காடுவெட்டிப் போட்டுக் கடிய நிலந்திருத்தி
வீடுகட்டிக் கொண்டிருக்கும் வேள்வணிகர்-வீடுகட்கு
அன்றைக்கு வந்த எங்கள் அம்மா இலக்குமியே
என்றைக்கும் நீங்கா திரு!
நின்மேலுமாணை, நின்மகன் மேலுமாணை, நின்மாக் கொழுநன்
தன்மேலுமாணை, தமிழ்மேலுமாணை தவமாவணிகச்
சின்னஞ்சிறுவர் தெரியாத காளையர் என்செயினும்
பின்னும் பொறுத்திருப்பாயே பெரிய இலக்குமியே!
நீங்காது நின்மகனும் நெடிய திருமாலும்
பாங்காக அன்றுவந்த பாற்கடல்போல்-தேங்காமல்
நன்றாக நீயிருந்து நாளும் வளம்பெருக்கி
என்றைக்கும் நீங்கா திரு!
-பாடுவார் முத்தப்ப செட்டியார்