நலம் தரும் நாச்சியார் அம்மன்
ஓம் சக்தி! ஓம் சக்தி! ஓம் சக்தி! ஓம்!
ஓம் சக்தி! ஓம் சக்தி! ஓம் சக்தி! ஓம்!
நாட்டமிகு தேவியாம் நானிலம் போற்றிடும்
நாச்சியார் அம்மை தாயே
காட்டுக்கு நடுவிலே நாச்சி என்னும் பெயரிலே
தோன்றிட்ட அம்மை நீயே
ஊர்மக்கள் யாவருக்கும் எளிதினில் அருளிட
எழுந் தருளவேண்டி உனையே
ஏற்றமிகு நகரத்தார் எல்லோரும் ஒன்றாக
ஊருக்குள் கோவில்அமைத்தார்
இளையதோர் நாச்சியாய் கம்பனூரில் வாழ்ந்திடும்
இனையற்ற அன்னை தாயே
இன்பங்கள் அனைத்தையும் எங்களது வீடுவரை
கொண்டுவரும் அன்னை நீயே!
நம்பியுன் காலடியே சரணமென பற்றினோம்
நிதமென்னைக் காத்து அருள்வாய்
நம்பினோர் வாழ்க்கையில் நன்மையே விளைத்திடும்
நாச்சியார் அம்மை தாயே!
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்!
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்!
அன்போடு அனைவரும் உன்னையே வேண்டினோம்
அடைக்கலம் தந்து அருள்வாய்
பண்போடு பிள்ளைகள் பரிவோடு பாடினோம்
பாங்குடன் வாழ வைப்பாய்
வாழ்வினில் வளம்பெற உன்பாதம் பற்றினோம்
வளமயாவும் தந்து அருள்வாய்
தயவாகத் தாளினை மறவாமல் எண்ணினோம்
தாயாக அருள் புரிகுவாய்
பலகல்வி பெற்றாலும் பன்னாட்டில் வாழ்ந்தாலும்
பலன் உன்னைப் போற்ற அன்றோ!
அன்னையுன் அருள்வேண்டி அனுதினம் வணங்கினோம்
அகிலமெல்லாம் காப்பது நீயுமன்றோ!
ஊருக்கு காவலாய் உலகுக்கே அன்னையாய்
உள்ளத்தில் உறைந்து விட்டாய்
நம்பினோர் வாழ்க்கையில் நன்மையே விளைத்திடும்
நாச்சியார் அம்மை தாயே!
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்!
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்!
சித்திரை திங்களில் பத்துநாள் திருவிழா
சிறப்புடன் நடத்தி வருவார்
ஊர்மக்கள் அனைவரும் ஒன்றாகக் கூடியே
உன்னடி பாடி வருவார்
கொண்டாடி மகிழ்ந்திடும் பிள்ளைகள் வாழ்வில்
வளங்களைத் அருளும் தாயே
கொடியேற்றி காப்பிட்டு முதலாம் திருநாளில்
கேடயம் ஏறிநீ வருவாய்
இளைஞர்குழு நடத்திடும் இரண்டாம் திருநாளில்
தங்கமாய்த் தாமரையில் ஜொலிப்பாய்
இதயத்தில் குடிகொண்ட எங்களது அன்னையே
இன்முகம் காட்டி அருள்வாய்
மலர்களின் மத்தியில் மங்கையுன் முகம்கண்டால்
மனதிற்கு அமைதி யன்றோ!
நம்பினோர் வாழ்க்கையில் நன்மையே விளைத்திடும்
நாச்சியார் அம்மை தாயே!
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்!
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்!
முறையாகத் தொழுவோரை முன்நின்று காத்திடும்
முத்தான சக்தி நீயே
மூன்றாம் நாளதனில் அன்னத்தில் மீதேறி
மகிழ்வோடுக் காக்க வருவாய்
வைரமாய் ஜொலித்திடும் நான்காம் திருநாளை
வைரவன் கோவிலார் நடத்திட
காமதேனு ஏறிநீ திருஉலா வருமழகை
காணக்கண் கோடி வேண்டும்!
பிள்ளையார் பட்டியார் பெருமையாய் நடத்திடும்
ஐந்தாம் திரு நாளிலே
சிங்காரமாகவே சிம்ம வாகனம் ஏறிநீ
சிறப்பாகவே வலம் வருவாய்
மூன்றாம் ஆறாம் ஏழாம் திருநாளை
இலுப்பைக் குடியார் நடத்திட
நம்பினோர் வாழ்க்கையில் நன்மையே விளைத்திடும்
நாச்சியார் அம்மை தாயே!
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்!
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்!
அடியவரின் துயரத்தை நொடியிலே களைந்திடும்
அன்பான அன்னை நீயே
ஆறாம் திருநாளில் ரிஷபத்தில் ஏறிநீயே
ஆதரவாய் நின்று காப்பாய்
எழிலான அன்னையே அன்பாக என்னையே
ஏற்றங்கள் தந்து காப்பாய்
ஏழாம் நாளதில் வெள்ளிக் குதிரையில்
ஏறிநீ காத்து அருள்வாய்
எட்டாம் திருநாளில் நகரத்தைப் பார்த்திட
தேரில் நீ ஏறிவருவாய்
ஊர்மக்கள் அனைவரும் தேர் வடம்பிடிக்கவே
அழகாக பவனி வருவாய்
ஒன்பதாம் நாளிலே தேர்த்தடம் காணநீ
யானையில் ஏறி வருவாய்
நம்பினோர் வாழ்க்கையில் நன்மையே விளைத்திடும்
நாச்சியார் அம்மை தாயே!
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்!
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்!
சிங்கையில் வாழ்கின்ற நாச்சியார்புர மக்கள்
அனைவரும் ஒன்றுகூடி
நடத்திடும் பத்தாம் திருநாளில் பூ-பல்லக்கு
ஏறிநீ வலம் வருவாய்
ஊரையே காக்கின்ற உத்தமி உன்னையே
ஊஞ்சலில் ஆட வைப்போம்!
பாவங்கள் போக்கிடும் பாவையே உனைஎண்ணி
பால்குடம் ஏந்தி வருவோம்!
மஞ்சளோடு குங்குமம் வேண்டியேநிற்போர்க்கு
மங்களம் தருவதுன் செய்கையே!
தஞ்சமென உன்பதம் நம்பியே வந்தோர்க்கு
தாயாக வருவதும் இயற்கையே!
நல்லோர் நலம்பெறவும் நன்மைகள் பெருகிடவும்
நலமனைத்தும் தந்து அருள்வாய்
நம்பினோர் வாழ்க்கையில் நன்மையே விளைத்திடும்
நாச்சியார் அம்மை தாயே!
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்!
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்!
துயரங்கள் துடைத்திடும் இனியவள் நீயென்று
திடமாக நம்பினேன் தாயே
சிகரங்கள் அடைந்திட சிறந்தவழி இதுவென்று
சீக்கிரம் சொல்லு வாயே
கருமங்கள் விலக்கிட கணப்பொழுதில் வந்திடும்
கருணை வடிவான தாயே
தருமங்கள் தழைத்திட நெறியோடு வாழ்ந்திட
தவறாது எனக்கு அருள்வாயே!
செல்வங்கள் தந்துமே சிரமங்கள் களைந்துமே
சந்ததிகள் காக்கும் தேவி!
நன்மைகள் அனைத்துமே எங்கட்க்கு நல்கிடும்
நானிலம் போற்றும் தேவி
இல்லங்கள் புகுந்துமே இன்னல்கள் களைந்துமே
இன்பங்கள் அருளும் தேவி!
நம்பினோர் வாழ்க்கையில் நன்மையே விளைத்திடும்
நாச்சியார் அம்மை தாயே!
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்!
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்!
பொன்னகை அணிந்துமே புன்னகை புரிந்துமே
புவியாள வந்த தேவி
என்மனம் மாறவே இன்முகம் ஆகவே
அருள் தரும் சக்திநீயே!
உடல்நலம் யாவுமே உறுதியாய் ஆகவே
உடனிருந்து அருளும் தேவி!
தொழில்வளம் என்றுமே சிறப்போடு இருந்திட
துணை புரியும் சக்திநீயே!
பொருள் வளம் யாவுமே பன்மடங்காகவே
பெருக்கிடும் கல்யாணியே!
வேண்டும் வரம் அத்தனையும் நினைத்தவுடன்
வேகமாய் தந்திடும் சக்திநீயே!
நற்குணம் யாவுமே என்குணம் ஆகவே
நல்லருள் புரியும் தேவி!
நம்பினோர் வாழ்க்கையில் நன்மையே விளைத்திடும்
நாச்சியார் அம்மை தாயே!
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்!
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்!
தமிழாலே கவிசொல்லி வாயாற உன்னையே
தினந்தோறும் தொழுது வந்தோம்
தவறேது செய்தாலும் தாய்போல பொறுத்துநீ
அடியேனை என்றும் காப்பாய்
மனக்கவலை யாவினையும் நொடிப்பொழுதில்
நீக்கிவிடும் அன்பான அன்னை நீயே
மனதார உன்னையே முழுமையாய் நம்பினோம்
முன்நின்று காக்க வா வா
உண்மைகள் உணர்த்திட எழுந்தருளும் அன்னையே
உன்னடியே பற்றி நின்றோம்
இன்பமாய் வாழ்வதனை எங்கட்க்கு நல்கிட
இப்பொழுதே இங்கு வா வா
எங்கள்குலம் சிறக்கவும் ஏற்றங்கள் காணவும்
என்றைக்கும் அருள் புரிகுவாயே
நம்பினோர் வாழ்க்கையில் நன்மையே விளைத்திடும்
நாச்சியார் அம்மை தாயே!
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்!
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்!
தேடினோம் தேடினோம் உன்னடி தேடினோம்
தினமெம்மை காக்க வேண்டும்
பாடினோம் பாடினோம் உன்புகழ் பாடினோம்
பாமாலைநீ ஏற்க வேண்டும்
போற்றினோம் போற்றினோம் உன்னையே போற்றினோம்
பக்கதுணை ஆக நீவர வேண்டும்
வேண்டினோம் வேண்டினோம் உன்னருள் வேண்டினோம்
வேண்டும் வரமளிக்க வேண்டும்
பற்றினோம் பற்றினோம் உன்பதம் பற்றினோம்
பண்புடன் யாம் வாழவேண்டும்
நாடினோம் நாடினோம் உன்னடி நாடினோம்
நன்மைகள் யாம் அடையவேண்டும்
நாவிற்கரசி என்நாவில் அமர்ந்து நீ
நல்லருள் புரிய வேண்டும்!
நம்பினோர் வாழ்க்கையில் நன்மையே விளைத்திடும்
நாச்சியார் அம்மை தாயே!
அழகு திருநாவிற்கரசு, நாச்சியாபுரம்.
ஓம் சக்தி! ஓம் சக்தி! ஓம் சக்தி! ஓம்!
ஓம் சக்தி! ஓம் சக்தி! ஓம் சக்தி! ஓம்!
நாட்டமிகு தேவியாம் நானிலம் போற்றிடும்
நாச்சியார் அம்மை தாயே
காட்டுக்கு நடுவிலே நாச்சி என்னும் பெயரிலே
தோன்றிட்ட அம்மை நீயே
ஊர்மக்கள் யாவருக்கும் எளிதினில் அருளிட
எழுந் தருளவேண்டி உனையே
ஏற்றமிகு நகரத்தார் எல்லோரும் ஒன்றாக
ஊருக்குள் கோவில்அமைத்தார்
இளையதோர் நாச்சியாய் கம்பனூரில் வாழ்ந்திடும்
இனையற்ற அன்னை தாயே
இன்பங்கள் அனைத்தையும் எங்களது வீடுவரை
கொண்டுவரும் அன்னை நீயே!
நம்பியுன் காலடியே சரணமென பற்றினோம்
நிதமென்னைக் காத்து அருள்வாய்
நம்பினோர் வாழ்க்கையில் நன்மையே விளைத்திடும்
நாச்சியார் அம்மை தாயே!
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்!
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்!
அன்போடு அனைவரும் உன்னையே வேண்டினோம்
அடைக்கலம் தந்து அருள்வாய்
பண்போடு பிள்ளைகள் பரிவோடு பாடினோம்
பாங்குடன் வாழ வைப்பாய்
வாழ்வினில் வளம்பெற உன்பாதம் பற்றினோம்
வளமயாவும் தந்து அருள்வாய்
தயவாகத் தாளினை மறவாமல் எண்ணினோம்
தாயாக அருள் புரிகுவாய்
பலகல்வி பெற்றாலும் பன்னாட்டில் வாழ்ந்தாலும்
பலன் உன்னைப் போற்ற அன்றோ!
அன்னையுன் அருள்வேண்டி அனுதினம் வணங்கினோம்
அகிலமெல்லாம் காப்பது நீயுமன்றோ!
ஊருக்கு காவலாய் உலகுக்கே அன்னையாய்
உள்ளத்தில் உறைந்து விட்டாய்
நம்பினோர் வாழ்க்கையில் நன்மையே விளைத்திடும்
நாச்சியார் அம்மை தாயே!
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்!
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்!
சித்திரை திங்களில் பத்துநாள் திருவிழா
சிறப்புடன் நடத்தி வருவார்
ஊர்மக்கள் அனைவரும் ஒன்றாகக் கூடியே
உன்னடி பாடி வருவார்
கொண்டாடி மகிழ்ந்திடும் பிள்ளைகள் வாழ்வில்
வளங்களைத் அருளும் தாயே
கொடியேற்றி காப்பிட்டு முதலாம் திருநாளில்
கேடயம் ஏறிநீ வருவாய்
இளைஞர்குழு நடத்திடும் இரண்டாம் திருநாளில்
தங்கமாய்த் தாமரையில் ஜொலிப்பாய்
இதயத்தில் குடிகொண்ட எங்களது அன்னையே
இன்முகம் காட்டி அருள்வாய்
மலர்களின் மத்தியில் மங்கையுன் முகம்கண்டால்
மனதிற்கு அமைதி யன்றோ!
நம்பினோர் வாழ்க்கையில் நன்மையே விளைத்திடும்
நாச்சியார் அம்மை தாயே!
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்!
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்!
முறையாகத் தொழுவோரை முன்நின்று காத்திடும்
முத்தான சக்தி நீயே
மூன்றாம் நாளதனில் அன்னத்தில் மீதேறி
மகிழ்வோடுக் காக்க வருவாய்
வைரமாய் ஜொலித்திடும் நான்காம் திருநாளை
வைரவன் கோவிலார் நடத்திட
காமதேனு ஏறிநீ திருஉலா வருமழகை
காணக்கண் கோடி வேண்டும்!
பிள்ளையார் பட்டியார் பெருமையாய் நடத்திடும்
ஐந்தாம் திரு நாளிலே
சிங்காரமாகவே சிம்ம வாகனம் ஏறிநீ
சிறப்பாகவே வலம் வருவாய்
மூன்றாம் ஆறாம் ஏழாம் திருநாளை
இலுப்பைக் குடியார் நடத்திட
நம்பினோர் வாழ்க்கையில் நன்மையே விளைத்திடும்
நாச்சியார் அம்மை தாயே!
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்!
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்!
அடியவரின் துயரத்தை நொடியிலே களைந்திடும்
அன்பான அன்னை நீயே
ஆறாம் திருநாளில் ரிஷபத்தில் ஏறிநீயே
ஆதரவாய் நின்று காப்பாய்
எழிலான அன்னையே அன்பாக என்னையே
ஏற்றங்கள் தந்து காப்பாய்
ஏழாம் நாளதில் வெள்ளிக் குதிரையில்
ஏறிநீ காத்து அருள்வாய்
எட்டாம் திருநாளில் நகரத்தைப் பார்த்திட
தேரில் நீ ஏறிவருவாய்
ஊர்மக்கள் அனைவரும் தேர் வடம்பிடிக்கவே
அழகாக பவனி வருவாய்
ஒன்பதாம் நாளிலே தேர்த்தடம் காணநீ
யானையில் ஏறி வருவாய்
நம்பினோர் வாழ்க்கையில் நன்மையே விளைத்திடும்
நாச்சியார் அம்மை தாயே!
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்!
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்!
சிங்கையில் வாழ்கின்ற நாச்சியார்புர மக்கள்
அனைவரும் ஒன்றுகூடி
நடத்திடும் பத்தாம் திருநாளில் பூ-பல்லக்கு
ஏறிநீ வலம் வருவாய்
ஊரையே காக்கின்ற உத்தமி உன்னையே
ஊஞ்சலில் ஆட வைப்போம்!
பாவங்கள் போக்கிடும் பாவையே உனைஎண்ணி
பால்குடம் ஏந்தி வருவோம்!
மஞ்சளோடு குங்குமம் வேண்டியேநிற்போர்க்கு
மங்களம் தருவதுன் செய்கையே!
தஞ்சமென உன்பதம் நம்பியே வந்தோர்க்கு
தாயாக வருவதும் இயற்கையே!
நல்லோர் நலம்பெறவும் நன்மைகள் பெருகிடவும்
நலமனைத்தும் தந்து அருள்வாய்
நம்பினோர் வாழ்க்கையில் நன்மையே விளைத்திடும்
நாச்சியார் அம்மை தாயே!
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்!
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்!
துயரங்கள் துடைத்திடும் இனியவள் நீயென்று
திடமாக நம்பினேன் தாயே
சிகரங்கள் அடைந்திட சிறந்தவழி இதுவென்று
சீக்கிரம் சொல்லு வாயே
கருமங்கள் விலக்கிட கணப்பொழுதில் வந்திடும்
கருணை வடிவான தாயே
தருமங்கள் தழைத்திட நெறியோடு வாழ்ந்திட
தவறாது எனக்கு அருள்வாயே!
செல்வங்கள் தந்துமே சிரமங்கள் களைந்துமே
சந்ததிகள் காக்கும் தேவி!
நன்மைகள் அனைத்துமே எங்கட்க்கு நல்கிடும்
நானிலம் போற்றும் தேவி
இல்லங்கள் புகுந்துமே இன்னல்கள் களைந்துமே
இன்பங்கள் அருளும் தேவி!
நம்பினோர் வாழ்க்கையில் நன்மையே விளைத்திடும்
நாச்சியார் அம்மை தாயே!
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்!
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்!
பொன்னகை அணிந்துமே புன்னகை புரிந்துமே
புவியாள வந்த தேவி
என்மனம் மாறவே இன்முகம் ஆகவே
அருள் தரும் சக்திநீயே!
உடல்நலம் யாவுமே உறுதியாய் ஆகவே
உடனிருந்து அருளும் தேவி!
தொழில்வளம் என்றுமே சிறப்போடு இருந்திட
துணை புரியும் சக்திநீயே!
பொருள் வளம் யாவுமே பன்மடங்காகவே
பெருக்கிடும் கல்யாணியே!
வேண்டும் வரம் அத்தனையும் நினைத்தவுடன்
வேகமாய் தந்திடும் சக்திநீயே!
நற்குணம் யாவுமே என்குணம் ஆகவே
நல்லருள் புரியும் தேவி!
நம்பினோர் வாழ்க்கையில் நன்மையே விளைத்திடும்
நாச்சியார் அம்மை தாயே!
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்!
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்!
தமிழாலே கவிசொல்லி வாயாற உன்னையே
தினந்தோறும் தொழுது வந்தோம்
தவறேது செய்தாலும் தாய்போல பொறுத்துநீ
அடியேனை என்றும் காப்பாய்
மனக்கவலை யாவினையும் நொடிப்பொழுதில்
நீக்கிவிடும் அன்பான அன்னை நீயே
மனதார உன்னையே முழுமையாய் நம்பினோம்
முன்நின்று காக்க வா வா
உண்மைகள் உணர்த்திட எழுந்தருளும் அன்னையே
உன்னடியே பற்றி நின்றோம்
இன்பமாய் வாழ்வதனை எங்கட்க்கு நல்கிட
இப்பொழுதே இங்கு வா வா
எங்கள்குலம் சிறக்கவும் ஏற்றங்கள் காணவும்
என்றைக்கும் அருள் புரிகுவாயே
நம்பினோர் வாழ்க்கையில் நன்மையே விளைத்திடும்
நாச்சியார் அம்மை தாயே!
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்!
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்!
தேடினோம் தேடினோம் உன்னடி தேடினோம்
தினமெம்மை காக்க வேண்டும்
பாடினோம் பாடினோம் உன்புகழ் பாடினோம்
பாமாலைநீ ஏற்க வேண்டும்
போற்றினோம் போற்றினோம் உன்னையே போற்றினோம்
பக்கதுணை ஆக நீவர வேண்டும்
வேண்டினோம் வேண்டினோம் உன்னருள் வேண்டினோம்
வேண்டும் வரமளிக்க வேண்டும்
பற்றினோம் பற்றினோம் உன்பதம் பற்றினோம்
பண்புடன் யாம் வாழவேண்டும்
நாடினோம் நாடினோம் உன்னடி நாடினோம்
நன்மைகள் யாம் அடையவேண்டும்
நாவிற்கரசி என்நாவில் அமர்ந்து நீ
நல்லருள் புரிய வேண்டும்!
நம்பினோர் வாழ்க்கையில் நன்மையே விளைத்திடும்
நாச்சியார் அம்மை தாயே!
அழகு திருநாவிற்கரசு, நாச்சியாபுரம்.