நல்ல நேரம்

தந்தனத்தான் தந்தனத்தான் தாளம் போடுங்க
சங்கரன்பெத்த புள்ளையெப்பத்தி ராகம்பாடுங்க


தந்தனத்தான் தந்தனத்தான் தாளம் போடுங்க
சங்கரன்பெத்த புள்ளையெப்பத்தி ராகம்பாடுங்க
பொறந்ததையா நல்லநேரம் எழுந்து பாருங்க,
போய்வரலாம், பழனிமலை நடந்து வாருங்க!
நடந்ததெல்லாம் நடந்ததையா மறந்துபோடுங்க!
நடக்கப்போற காரியத்தை நினைத்து வாழுங்க
சேவல்கூவி அழைக்குதுகண் திறந்து பாருங்க!
சிங்கார வேலன் புகழ் உணர்ந்து பாடுங்க!
காவல்செய்யும் முருகன் மலை அருகில் தாணுங்க - அந்தக்
கடவுள்பெயர் சொல்லச்சொல்லி உருகி ஆடுங்க!
ஆணும் பெண்ணும் கூட்டம்கூடி பாட்டுப்பாடுங்க-வரம்
ஆறுமுகச் சாமியிடம் கேட்டு வாங்குங்க
வேணுமுந்தன் காட்சிஎன்று சொல்லிப்போடுங்க-அவன்
வேறுவார்த்தை சொல்லவந்தா தள்ளிப்போடுங்க!
அரோகரா சொல்வதற்குத் தொங்கிப்போடுங்க - வரும்
அசுரப்பய கொட்ட மெல்லாம் அடங்கிப்போகுங்க!
மோதவந்த துன்பமெல்லாம் முடங்கிப்போகுங்க -ஓரு
மோதகத்தான் தம்பிபலம் விளங்கிப் போகுங்க!
தந்தனத்தான் தந்தனத்தான் தாளம் போடுங்க
சங்கரன்பெத்த புள்ளையெப்பத்தி ராகம் பாடுங்க
கந்தனுக்கும் நெஞ்சினுக்குள் கோலம்போடுங்க
கண்ணில்வரும் நீரைக்கொண்டு பாலம் போடுங்க

வீர. மெய்யப்பன்