நாச்சியார் அம்மன் துதி.
மாணிக்கத் தேரினிலே
மகிழ்வோடு வலம் வரும்
நாச்சிக்கு - பாத
காணிக்கை செலுத்தி
ஆச்சிகள் வேண்டுவோம் அவள்
அருள் ஆசிக்கு!
சித்திரை தேரினிலே
சிரிப்போடு நீ வருகையிலே
நித்திரையும் மறந்து போகும்
பால் அருந்தும் பிள்ளைக்கு
எத்துறையிலும் எம்மக்கள்
முத்திரை பதிக்க நீ
முன் நின்று உதவ வேண்டும்!
நாவினிக்கப்பாடி பூமணக்கச்சூடி
வெற்றிக் கொடி பறக்க
சுற்றமெல்லாம் சிறக்க
நலமோடும் வளமோடும் வாழ
நாச்சியாரம்மனை நாளும்
நாம் துதிப்போமே!
உமையாள் நடராஜன், கொச்சி இல்லம், நாச்சியாபுரம்
மாணிக்கத் தேரினிலே
மகிழ்வோடு வலம் வரும்
நாச்சிக்கு - பாத
காணிக்கை செலுத்தி
ஆச்சிகள் வேண்டுவோம் அவள்
அருள் ஆசிக்கு!
சித்திரை தேரினிலே
சிரிப்போடு நீ வருகையிலே
நித்திரையும் மறந்து போகும்
பால் அருந்தும் பிள்ளைக்கு
எத்துறையிலும் எம்மக்கள்
முத்திரை பதிக்க நீ
முன் நின்று உதவ வேண்டும்!
நாவினிக்கப்பாடி பூமணக்கச்சூடி
வெற்றிக் கொடி பறக்க
சுற்றமெல்லாம் சிறக்க
நலமோடும் வளமோடும் வாழ
நாச்சியாரம்மனை நாளும்
நாம் துதிப்போமே!
உமையாள் நடராஜன், கொச்சி இல்லம், நாச்சியாபுரம்