நீ அழைத்தால் நான் வருவேன் அறுமுகவேலா
நீ அழைத்தால் நான் வருவேன் அறுமுகவேலா
உனதருள் கிடைத்தால் நலம் பெறுவேன் உமை சிவபாலா
சரண கோஷம் மலையைச்சுற்றி எதிரொலிக்குது
உனைக் காணவரும் பக்தர் கூட்டம் மனம் இனிக்குது
கடந்து வந்த பாதையிலே கஷ்டம் இருந்தது
கந்தன் உனைக் கண்டவுடன் காற்றில் பறந்தது
வழி நெடுக உந்தன் நாமம் உச்சரிக்கையில்
விழி பெருக கண்ணீரில் தத்தளிக்கையில்
அருட்காட்சி தரவேண்டி உன்னை அழைக்கையில்
அரோகரா என்று சொல்ல சக்தி பிறக்குது
சாலை வழி கூறிவரும் சரண கோஷங்கள்
வேலன் உந்தன் செவிகளுக்கு விருந்து படைத்திடும்
காலையிலும் மாலையிலும் கவிகள் பாடியே
நாளை எனும் நாள் மறந்து நடந்து வருகிறேன்
தங்கரதம் மீதமர்ந்து தரணி ஆள்பவா
தங்க மனக் கோவிலிலே தங்க ஓடிவா
பொங்கு மன்பு பக்தர்களின் புகழில் சிறந்தவா
பொன்பழநி ஆண்டவனே பொறுத்துக்காக்கவா
ஆறுபடை வீட்டினிலும் அமர்ந்த மன்னவா
ஆனைமுகன் தம்பியாக அவதரித்தவா
ஆறுதலை பன்னிருகை ஐயா வேலவா
ஆறுதலை தந்து எனை அருளிக் காக்கவா
காவடிகள் ஆட்டத்திலே கனிந்து மகிழ்ந்திடும்
சேவடியே சரணமென நினைந்து வாழ்கிறேன்
பாலகனும் கால்நடையாய் காண வருகிறேன்
வேல்முருகா வேலவனே விரைந்து அருளவா
நீ அழைத்தால் நான் வருவேன் அறுமுகவேலா
உனதருள் கிடைத்தால் நலம் பெறுவேன் உமை சிவபாலா
சரண கோஷம் மலையைச்சுற்றி எதிரொலிக்குது
உனைக் காணவரும் பக்தர் கூட்டம் மனம் இனிக்குது
கடந்து வந்த பாதையிலே கஷ்டம் இருந்தது
கந்தன் உனைக் கண்டவுடன் காற்றில் பறந்தது
வழி நெடுக உந்தன் நாமம் உச்சரிக்கையில்
விழி பெருக கண்ணீரில் தத்தளிக்கையில்
அருட்காட்சி தரவேண்டி உன்னை அழைக்கையில்
அரோகரா என்று சொல்ல சக்தி பிறக்குது
சாலை வழி கூறிவரும் சரண கோஷங்கள்
வேலன் உந்தன் செவிகளுக்கு விருந்து படைத்திடும்
காலையிலும் மாலையிலும் கவிகள் பாடியே
நாளை எனும் நாள் மறந்து நடந்து வருகிறேன்
தங்கரதம் மீதமர்ந்து தரணி ஆள்பவா
தங்க மனக் கோவிலிலே தங்க ஓடிவா
பொங்கு மன்பு பக்தர்களின் புகழில் சிறந்தவா
பொன்பழநி ஆண்டவனே பொறுத்துக்காக்கவா
ஆறுபடை வீட்டினிலும் அமர்ந்த மன்னவா
ஆனைமுகன் தம்பியாக அவதரித்தவா
ஆறுதலை பன்னிருகை ஐயா வேலவா
ஆறுதலை தந்து எனை அருளிக் காக்கவா
காவடிகள் ஆட்டத்திலே கனிந்து மகிழ்ந்திடும்
சேவடியே சரணமென நினைந்து வாழ்கிறேன்
பாலகனும் கால்நடையாய் காண வருகிறேன்
வேல்முருகா வேலவனே விரைந்து அருளவா