படைவீட்டு வேலன்

வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்-வெற்றி
வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்


ஆறுமுக வேலவா அழகுமுகம் காட்டிவா
ஆனந்தமாய் ஓடிவா அருள் கொடுக்க இங்குவா

ஆறுபடை நாயகா அழகுமயில் வாகனா
பாருடை பக்தரை பாதுகாக்க நீயும் வா

பாதமெலாம் நோகுது பழநிமுகம் காணுமுன்
பாதைவழி வேலவா பார்த்துவர நீயும்வா

வள்ளியம்மை பெண்ணொருத்தி வந்தாள் உந்தன் நாயகி
தெய்வானை தேவியோ தேடிநின்றாள் வீட்டிலே

ஏனொசென்றாய் வேலவா எங்குசென்றாய் வேலவா
தேடிவரும் பக்தர்குறை ஓடிவந்து காக்கவா

காவடிகள் ஆடிவரக் கந்தன்மயில் ஆடுது
பாவடிகள் பாடிவந்து பாதைவழி கடக்குது

கோடிக்கோடி பக்தர்கள் கூடிவந்த யாத்திரை
நாடிநீயும் ஓடிவந்து நலமே தந்தருளுவாய்


-வாஸன்ஸ் காபி எஸ்.எம். அழகப்பன்