பனி தங்கு நிலவு போல் பால்போல்
ஓம் சக்தி! ஓம் சக்தி! ஓம் சக்தி! ஓம்!
ஓம் சக்தி! ஓம் சக்தி! ஓம் சக்தி! ஓம்!
பனி தங்கு நிலவு போல் பால்போல்
பளிங்குபோல் பட்டொளி நிறைந்த வடிவம்
படிகமனி மாலையும் ஏடும் தரித்தயாள்
பயின்றருளும் நான்கு கரமும்
புனிதங்கள் யாவும் பொருந்த வெண்தாமரை
பூமேல் விளஙகு பாகமும்
பொழுதெல்லாம் என்னுமென் பழுதெல்லாம் போக்கி
நற்புலமை தரவேண்டும் அம்மா
கணிதந்து மலர்தந்து கவிதந்து தொழுவோரை
கண்தந்து காக்கும் அரசே
கலைஞான மகளென்று நிலையான புகழ் கொண்டு
கருணை மயமான பொருளே
இனி தங்கு தடையின்றி நான் பாட
நீ கேட்க இதயம் கனிந்து அருள்வாய்
இறைவிஎனை ஆண்டருளும் இராஜராஜேஸ்வரி
இமயமலை வாழும் உமையே
ஓம் சக்தி! ஓம் சக்தி! ஓம் சக்தி! ஓம்!
ஓம் சக்தி! ஓம் சக்தி! ஓம் சக்தி! ஓம்!
பனி தங்கு நிலவு போல் பால்போல்
பளிங்குபோல் பட்டொளி நிறைந்த வடிவம்
படிகமனி மாலையும் ஏடும் தரித்தயாள்
பயின்றருளும் நான்கு கரமும்
புனிதங்கள் யாவும் பொருந்த வெண்தாமரை
பூமேல் விளஙகு பாகமும்
பொழுதெல்லாம் என்னுமென் பழுதெல்லாம் போக்கி
நற்புலமை தரவேண்டும் அம்மா
கணிதந்து மலர்தந்து கவிதந்து தொழுவோரை
கண்தந்து காக்கும் அரசே
கலைஞான மகளென்று நிலையான புகழ் கொண்டு
கருணை மயமான பொருளே
இனி தங்கு தடையின்றி நான் பாட
நீ கேட்க இதயம் கனிந்து அருள்வாய்
இறைவிஎனை ஆண்டருளும் இராஜராஜேஸ்வரி
இமயமலை வாழும் உமையே