பழனிமலை படியேறு
படியேரப்பா படியேறு பழனிமலையதன் படியேறு
படிப்படியாக நீயேறு பல படியாக முன்னேறு
ஒரு படியேறிட முருகன் அவன்
உயர்படியில் நம்மை ஏற்றிடுவான்
மறுபடி மறுபடி மலையேற
மலைக்கும்படி நம்மை மாற்றிடுவான்
நித்தமுமே திருப்புகழைப் படி
நிலைத்த உறுதியை கொண்டபடி
உன்மத fச்அடியார் சென்றபடி
உள்ளத்தில் முருகனை நினைத்தபடி
அகத்தைக் கெடுக்கும் ஆசைப்படி
அதனை முதலில் வாழ்வில்படி
புகழைக் கொடுத்தே காக்கும்படி
புண்ணிய பழனியின் திருப்படி
சர்க்கரைகாவடி எடுத்தப்டி
சண்முகன் திருவருள் தொழுதபடி
சந்ததி மறுபடி தழைக்கும்படி
சரவணன் பாடல்கள் தினமும்படி
வேலனை நினைப்போர் எண்ணப்படி
வேண்டிவதெல்லாம் நல்லபடி
வாழ்வில் வசந்தம் வந்தபடி
பணிவும் பதவியும் வந்தபடி
செய்யும் தொழில்கள் சிறக்கும்படி
சிந்தையில் முருகன் இருந்தபடி
தருவான் அருளை நல்லபடி
பெற்றே வாழ்வோம் சொல்லின்படி
வள்ளிக் கணவன் அருளின்படி
வாடாமலர் பயிர் தழைக்கும்படி
அள்ளித் தந்திடும் வள்ளல்படி
அகிலெமெல்லாம் அருள்பழனிப்படி
படியேரப்பா படியேறு பழனிமலையதன் படியேறு
படிப்படியாக நீயேறு பல படியாக முன்னேறு
ஒரு படியேறிட முருகன் அவன்
உயர்படியில் நம்மை ஏற்றிடுவான்
மறுபடி மறுபடி மலையேற
மலைக்கும்படி நம்மை மாற்றிடுவான்
நித்தமுமே திருப்புகழைப் படி
நிலைத்த உறுதியை கொண்டபடி
உன்மத fச்அடியார் சென்றபடி
உள்ளத்தில் முருகனை நினைத்தபடி
அகத்தைக் கெடுக்கும் ஆசைப்படி
அதனை முதலில் வாழ்வில்படி
புகழைக் கொடுத்தே காக்கும்படி
புண்ணிய பழனியின் திருப்படி
சர்க்கரைகாவடி எடுத்தப்டி
சண்முகன் திருவருள் தொழுதபடி
சந்ததி மறுபடி தழைக்கும்படி
சரவணன் பாடல்கள் தினமும்படி
வேலனை நினைப்போர் எண்ணப்படி
வேண்டிவதெல்லாம் நல்லபடி
வாழ்வில் வசந்தம் வந்தபடி
பணிவும் பதவியும் வந்தபடி
செய்யும் தொழில்கள் சிறக்கும்படி
சிந்தையில் முருகன் இருந்தபடி
தருவான் அருளை நல்லபடி
பெற்றே வாழ்வோம் சொல்லின்படி
வள்ளிக் கணவன் அருளின்படி
வாடாமலர் பயிர் தழைக்கும்படி
அள்ளித் தந்திடும் வள்ளல்படி
அகிலெமெல்லாம் அருள்பழனிப்படி


