பழனிமலை மேலே

பழனிமலை மேலே, ஓர் அழகுச் சித்திரம் !
பாடப்பாட செஞ்சத்திலே பரவ சம்வரும் !


பழனிமலை மேலே, ஓர் அழகுச் சித்திரம் !
பாடப்பாட செஞ்சத்திலே பரவ சம்வரும் !
குழந்தையாகக் காட்சி தரும்கனிந்த தத்துவம் !
கொள்ளைகொள்ளை யாய்வழங்கும் அன்புப் பெட்டகம் !

தாயுமுண்டு; தந்தையுண்டு; கோபம் என்னவோ ?
சம்சாரம் இருவருண்டு; தாபம் என்னவோ ?
தேசம் எங்கும் செல்வமுண்டு; பிள்ளைகள் உண்டு,
சிவனாண்டி னதென்ன கூறுக இன்று !

பட்டாடை எங்களுக்கு பலப்பல தந்தாய் !
பகவானே ஒரு முழத்தில் கோவணம் கொண்டாய் !
கட்டான கனதனங்கள் வாகனம் இருக்க,
கந்தா, நீ திருநீற்றுக் காப்பொடு நின்றாய் !

சக்திவேல் விடுத்த சூரசம்ஹார மூர்த்தி,
தண்டாயுதம் எடுத்ததிலே என்னய்யா கீர்த்தி ?
அத்தனையும் துறந்தவர்க்கே னந்தம் என்றே
ண்டியாக நின்றாயோ, அய்யனே இங்கே !

உலகமெல்லாம் புகழுகின்ற உன்னெழில் தோற்றம் !
ஓத ஓத வாழ்க்கையிலே உண்டாகும் ஏற்றம் !
அலைபாயும் பேதைமனம் உன்னிடம் தஞ்சம் !
அதிலே நீ விளையாடுதினம் தினம் கொஞ்சம் !

அய்யா, நீ மெய்யான னந்தத் துறவி !
அடியேனோ ஊஞ்சலாடும் சையின் பிறவி !
தெய்வ ஞான முனிவர்க்கு நீ தேனோடும் அருவி !
சிதறும் துளியில் ஆடட்டுமே
சின்னஞ்சிறு குருவி - இந்தச்
சின்னஞ்சிறு குருவி !

அருட்கவி கு.செ.இராமசாமி.