பாலகுமாரன் பாவலர் தோழன்

வேல் முருகா வேல் முருகா
வேல் முருகா வேல்
வேல் முருகா வேல் முருகா
வேல் முருகா வேல்
வேல் முருகா வேல் முருகா
வேல் முருகா வேல்


வேல் முருகா மாப்பழனி
வேல் முருகா வேல்
பழனிமலை மேலே ஒரு
பால குமாரன்
பாலகுமாரன் முருகன்
பாவலர் தோழன்
அழகு மயில் மேலேவரும்
ஆனந்த ரூபன்
ஆனந்தரூபன் அவன்
தானெங்கள் ஈசன்(வேல் முருகா)

குடம்குடமாய்ப் பால்குளிக்கும்
பாலகன் அவனே -ஒரு
குறத்திப்பெண்ணைத் துரத்திச்சென்ற
வாலிபன் அவனே
இடம்வலமாய் மாறிமாறி
வேலுடன் நமையே - தினம்
இரவு பகல் பாதுகாக்கும்
காவலன் அவனே(வேல் முருகா)

பூஅளந்த கைகளுக்குப்
பொன்னை அளப்பான்
பொன்னளந்து தந்தவர்க்குப்
புகழை வளர்ப்பான்
நானளந்த அளப்பையெல்லாம்
நாளும் சகிப்பான் -அது
தேனளந்த கவிதை என்று
சிந்தை களிப்பான்(வேல் முருகா)