பாலனைப்போல் தோன்றுகின்றாய் பழநிவேலா
நீயும் பண்டாரம்போல் நிற்பதேனோ பழநிவேலா

வேலையேந்தும் கரங்களிலே பழநிவேலா
கூட வேறுகுச்சி இருப்பதென்ன பழநிவேலா

கூடவரும் மயிலுமெங்கே பழநிவேலா
உந்தன் கோபத்தினால் ஓடியதோ பழநிவேலா

தேடிப்பிடித்து வந்திடுவேன் பழநிவேலா
நீயும் தீந்தமிழால் பேசிடுவாய் பழநிவேலா

உலகமுழுதும் சுற்றினாலும் பழநிவேலா
அய்யா உனக்குபழம் கிடைக்கவில்லை பழநிவேலா

அந்தகோபத்தினால் நீயுமெங்கள் பழநிவேலா
ஆண்டி வேடம் பூண்டுகொண்டாய் பழநிவேலா

அப்பா உன்னைத்திட்டினாரோ பழநிவேலா
உந்தன் அண்ணன்வம்பு செய்தனரோ பழநிவேலா

எப்பொழுது வீடுசெல்வாய் பழநிவேலா
விடை எங்களுக்கு சொல்லிடுவாய் பழநிவேலா

உண்டியலில் பணமிருக்கு பழநிவேலா
நல்ல உடைகள்தைத்து அணிந்தாலென்ன பழநிவேலா

துண்டுகட்டி நிற்பதேனோ பழநிவேலா
பட்டு துணிகள்வாங்கி தைத்திடலாம் பழநிவேலா

அன்னை உமாதேவியாரும் பழநிவேலா
உனக்கு அழகழகாய் அலங்கரிப்பார் பழநிவேலா

சும்மாஏனோ செலவுஎன்று பழநிவேலா
மொட்டை நீயும் அடித்துக்கொண்டாய் பழநிவேலா

உன்னைக்காணவரும் பக்தரெல்லாம் பழநிவேலா
பூணுகிறார் மொட்டைதனை உன்னைப்போலே

ஏனோஇந்த கோலமெல்லாம் பழநிவேலா
நீயும் இறங்கிக்கீழே வந்திடுவாய் பழநிவேலா

பழனிமலை ஆண்டவனே பழநிவேலா
உந்தன் பக்தர்களை காத்திடுவாய் பழநிவேலா

பால்குடங்கள் கொண்டுவந்து பழநிவேலா
உந்தன் பாதமலர் சேர்த்திடுவோம் பழநிவேலா

காவடிகள் கொண்டுவந்து பழநிவேலா
உந்தன் காலடியில் சேர்த்திடுவோம் பழநிவேலா

ஒத்தயடி பாதையெல்லாம் பழநிவேலா
நாங்க உன்னைப்பார்க்க நடந்துவறோம் பழநிவேலா

கல்லும்முள்ளும் காலில்குத்த பழநிவேலா
உந்தன் கருணைவேண்டி நடந்துவறோம் பழநிவேலா

கல்லும்முள்ளும் காலில்குத்த பழநிவேலா
உந்தன் காவடியை சுமந்துவாறோம் பழநிவேலா

பழனிமலை ஆண்டவனே பழநிவேலா
உந்தன் பக்தர்களை காத்திடுவாய் பழநிவேலா