பினாங்குத் தண்ணீர் மலையான்
செந்தமிழ் நாட்டுப் பக்தர் காணத்
தென் பழனிப்பதி தைப்பூசம்
சந்தத் தமிழர் சீனர் காணத்
தண்ணீர் மலையில் தைப்பூசம்!
கந்தா என்றே செந்தூர்த் தமிழர்
காவடி ஏந்தி ஆடுகிறார்
சந்தத் தோடும் மலேயர் சீனர்
தண்ணீர் மலையில் ஆடுகிறார்! 1
பாடப் பாடப் பாட்டுக் குள்ளே
பரமன் வந்தே ஆடுகிறான்
ஆடும் அடியார் காலில் கொஞ்ச
அவனே சதங்கை ஆகின்றான்
கூடும் கூட்டம் கடலைப் போலே
குமரன் தன்னைத் தொழுகிறது
கொஞ்சும் முருகன் கருணை கேட்டுக்
குழந்தை நெஞ்சம் அழுகிறது! 2
அன்னை தந்தை நம்துணையல்ல
அவனே என்றும் துணையாவான்
கன்னித் தமிழில் பாடப் பாடக்
கந்தன் கருணைக் கடலானான்
தன்னைப் பாடும் அடியார்க் காகத்
தண்ணீர் மலையான் நிற்கின்றான்
மன்னும் பழனி செந்தூர்க் காட்சி
மலேயர் காணத் தருகின்றான்! 3
நாட்டில் கண்டு தண்ணீர் மலையான்
நயத்தை உரைத்தோர் பேரவையில்
பாட்டில் மட்டும் தண்ணீர் மலையைப்
பார்த்தேன் வந்து பாடுகிறேன்
ஆட்டம் எல்லாம் அடங்கும் முன்னால்
அவனைக் காணத் தருவானோ?
பாட்டுக் குள்ளே வண்ணத் தமிழில்
பார்த்தது போதும் என்பானோ? 4
இந்தப் பிறவி காணா விட்டால்
இனியொரு பிறவி எடுத்திடுவேன்
வந்து பிறந்து நேரில் தண்ணீர்
மலையான் தன்னைத் தரிசிப்பேன்
அந்தப் பிறவி கிட்டா விட்டால்
அடுத்த பிறவி பெற்றிடுவேன்
வெந்தே போனால் அதன்பின் கூட
வேலன் தன்னை விடமாட்டேன்! 5
தண்ணீர் மலையில் ஆண்ட வனே
தமிழில் உன்னைப் பாடுகிறோம்
கண்ணீர் தன்னை அற மாற்றிக்
கழலில் சேர்க்க வேண்டுகிறோம்
மண்ணில் இன்று பல துன்பம்
வருத்த நாங்கள் வாடுகிறோம்
எண்ணத் துள்ளே நீ வந்தே
எம்மைக் காக்க வேண்டுகிறோம்! 6
பொற்கிழிக் கவிஞர் சொ.சொ.மீ.சுந்தரம்
செந்தமிழ் நாட்டுப் பக்தர் காணத்
தென் பழனிப்பதி தைப்பூசம்
சந்தத் தமிழர் சீனர் காணத்
தண்ணீர் மலையில் தைப்பூசம்!
கந்தா என்றே செந்தூர்த் தமிழர்
காவடி ஏந்தி ஆடுகிறார்
சந்தத் தோடும் மலேயர் சீனர்
தண்ணீர் மலையில் ஆடுகிறார்! 1
பாடப் பாடப் பாட்டுக் குள்ளே
பரமன் வந்தே ஆடுகிறான்
ஆடும் அடியார் காலில் கொஞ்ச
அவனே சதங்கை ஆகின்றான்
கூடும் கூட்டம் கடலைப் போலே
குமரன் தன்னைத் தொழுகிறது
கொஞ்சும் முருகன் கருணை கேட்டுக்
குழந்தை நெஞ்சம் அழுகிறது! 2
அன்னை தந்தை நம்துணையல்ல
அவனே என்றும் துணையாவான்
கன்னித் தமிழில் பாடப் பாடக்
கந்தன் கருணைக் கடலானான்
தன்னைப் பாடும் அடியார்க் காகத்
தண்ணீர் மலையான் நிற்கின்றான்
மன்னும் பழனி செந்தூர்க் காட்சி
மலேயர் காணத் தருகின்றான்! 3
நாட்டில் கண்டு தண்ணீர் மலையான்
நயத்தை உரைத்தோர் பேரவையில்
பாட்டில் மட்டும் தண்ணீர் மலையைப்
பார்த்தேன் வந்து பாடுகிறேன்
ஆட்டம் எல்லாம் அடங்கும் முன்னால்
அவனைக் காணத் தருவானோ?
பாட்டுக் குள்ளே வண்ணத் தமிழில்
பார்த்தது போதும் என்பானோ? 4
இந்தப் பிறவி காணா விட்டால்
இனியொரு பிறவி எடுத்திடுவேன்
வந்து பிறந்து நேரில் தண்ணீர்
மலையான் தன்னைத் தரிசிப்பேன்
அந்தப் பிறவி கிட்டா விட்டால்
அடுத்த பிறவி பெற்றிடுவேன்
வெந்தே போனால் அதன்பின் கூட
வேலன் தன்னை விடமாட்டேன்! 5
தண்ணீர் மலையில் ஆண்ட வனே
தமிழில் உன்னைப் பாடுகிறோம்
கண்ணீர் தன்னை அற மாற்றிக்
கழலில் சேர்க்க வேண்டுகிறோம்
மண்ணில் இன்று பல துன்பம்
வருத்த நாங்கள் வாடுகிறோம்
எண்ணத் துள்ளே நீ வந்தே
எம்மைக் காக்க வேண்டுகிறோம்! 6
பொற்கிழிக் கவிஞர் சொ.சொ.மீ.சுந்தரம்