மயில்

மயில் வந்து ஆடுது மலைமேலே
குயில் வந்து பாடுது சிலைபோலே
வேல் வந்து மின்னுது கண்ணெதிரே - என்
வேலனைக் காணேனோ என்னெதிரே?


திருப்புகழ் பாடியே கைதொழுதேன்
கருப்புகல் நீக்கிட மெய்தொழுதேன்
விருப்புடன் வேண்டியே பாடுகிறேன்
விராலிமலை நோக்கி ஓடுகிறேன்.

சோலையில் வந்தால் குறைதீரும் -அந்த
சுந்தரப் புன்னகை நிறைவாகும்
மாலையில் மயங்கியே வாடுகிறேன்
மையலில் உன்னையே தேடுகிறேன்.

வள்ளிக்கு வாய்த்த வடிவழகா!
அள்ளிடஆவி துடிக்குதப்பா
சொல்லிச் சொல்லி என்ன பயன்?
நில்லு நில்லு என்கண்ணெதிரே!

- அழ. ரெத்தினம் தேவகோட்டை