வருகைப் பத்து

மலைமாதின் மகனாகி மயிலேறி விளையாடி
மலைவீடு கொண்ட குமரா
மதிசூடும் பெருமானின் வளர்காதில் உபதேசம்
வளமோடு சொன்ன குருவே
அலைபாயும் செந்தூ¡¢ல் அரசாளும் சிங்கார
அலங்கார மான திருவே
அசுலேசர் தலைசீவ அணிதேவர் துணைபோன
அதிருப வெற்றி யறிவே

நிலையான தமிழாலே நிதம்பாடித் தொழுவோர்க்க
நிறைவோடு தருக நலமே
நின்பாதம் எந்நாளும் நினைவாகித் துதிப்போரை
நீகாக்க வேணுந் தினமே
உடைவாயில் உணவாகி உலகோ¡¢ன் பசியாற்றும்
உன்பாதம் மென்மை இதமே
உறவாடுந் தேவானை குறமாதுன் உடனாக
ஓடோடி வருக நிதமே

என்றாடுஞ் சிவனா¡¢ன் மலரான விழிசீற
வடிவோடு எந்த குமரா
மலைதோறும் படைவீடு மனைகாக்க இருமாதர்
மயிலேறி ஆடும் அரசே
கன்றாடி வரும்போது கறவாத பசுவேது
காத்தாள நேர மிதுவே
கண்ணாலே இருளோட்டிக் கருத்தோடு அருளூட்டிக்
கனிவோடு செய்க நலமே

நன்றான தமிழ்பாடும் நல்லோ¡¢ன் மனைதோறும்
நலந்தூவ ஏறுமயிலே
நற்றாயின் வேலேந்தும் நல்லோனே குமரேசா
நடமாடும் ஆறுமுகமே
ஒன்றான பெற்றோ¡¢ன் உளமாடும் எழிலான
உன்பாதம் மென்மை இதமே
உறவாடுந் தோவனை குறமாதுன் உடனாக

ஓடோடி வருக நிதமே
ஆங்காரன் உடல்கீறி ஆணிசேவல் மயிலாக்கி
அருளீந்த சுப்ரமணியே
அன்பான தேவானை அழகான குறமாதின்
அகமாளும் இன்ப ஒளியே
வாங்காவின் ஒலியோடு வழிப்பாதை நடைபோட்டு
வருவோரை¨ காக்க நிதமே
வகையான இறையென்ற மகிழ்வோடு உனைத்தேடி
வரங்கேட்கும் கோடி மனமே

தீங்கேதும் அறியாத சீரான அடியாரைச்
சிறந்தோங்கச் செய்த தமிழே
திருவேலைக் கையேந்திச் சிலம்பாட மயிலேறி
செகமான வந்த எழிலே
ஓங்காரப் பொருளேதும் உமையீன்ற திருவான
உன்பாதம் மென்மை இதமே
உறவாடுந் தேவானை குறமாதுன் உடனாக
ஓடோடி வருக நிதமே

கயிலாயச் சிவனா¡¢ன் கண்தோன்றிஉருவான
கதில்வேலா தங்க வடிவே
கனியீந்த நாரதனும் கலகத்தை வளர்த்தானே
காசினியோர் அறிந்த கதையே
வயிறோங்கு கணபதியும் வாயாடிப் பெற்றானாம்
வளமான மாவின் கனியே
வடிவாகப் புவிசுற்றி நீயோடி வரும்போது
வாய்மூடி நின்றான் சிவனே

மயிலோடு வேலோடு மாங்கனியே நீவேண்டி
வன்கோபம் உள்ள திருவே
மனந்தேடும் பழமான மலையேறி உடைமாறி
வடிவோடு நின்ற குமரா
ஒயிலோடே எந்நாளும் உலகாளும் எழிலான
உன்பாதம் மென்மை இதமே
உறவாடுந் தேவானை குறமாதுன் உடனாக
ஓடோடி வருக நிதமே

தென்கூடல் நகராளும் திருமீனாள் உனைத்தேடித்
திருவீதி சுற்றி வருவான்
சீர்காசித் தாயாராம் சிறப்பான சாலாட்சி
தினம் நாடித் தேடி வருவாள்
மன்றான தில்லையிலே மாதாவாம் தருமாம்பாள்
மனம்வாடி நின்றாள் மிகவே
மகிழ்வான ஐயாற்று வாழ்வான தருமாம்பாள்
மனந்தேடும் உன்றன் முகமே

குன்றேறிக் கனிதேடும் குகநேசா வரவேணும்
குணமோங்கு தாயின் இடமே
குறையாத அன்போது கூர்வேலும் தருவாளாம்
குணம்மாறி விடுக சினமே
உன்மேனி பொன்னாகும் உமைநாடும் எழிலான
உன்பாதம் மென்மை இதமே
உறவாடுந் தேவானை கறமாதுன் உடனாக
ஓடோடி வருக நிதமே.

வானோ¡¢ன் முறையீடு தனைக்கேட்டுச் சா¢யான
வழிகூற வந்த குமரா
வன்சூரர் தலைவாங்கி வானோ¡¢ன் முடியேற்ற
வடிவேலை ஏந்தும் முருகா
தேனூறும் பூமாலை திருமார்பில் அசைந்தாடத்
திருநீறு பூசும் அழகே
தேவகுலப் பா¢சான தேவானை தனையேற்றுத்
திருவாழ்வு தந்த எழிலே

தானேறும் மயிலாடத் தனிவேலும் தானாடத்
தமிழ்கூறும் மூல முதலே
தளராத மதியோடு சா¢யாத நிதிகூட்டித்
தரவேணும் கோடி நலமே
ஊனோடு உயிராகி உணர்வாகி உலகாளும்
உன்பாதம் மென்மை இதமே
உறவாடுந் தேவானை குறமாதுன் உடனாக
ஓடோடி வருக நிதமே.

அடையாத திருவீதி அழகான நின்கோயில்
அதைநாடும் என்றன் மனமே
அபிஷேகம் பன்னீரால் அலங்காரம் வெண்ணீரால்
அதிரூபம் உன்றன் எழிலே
கடலாளும் கலமாகும் கனவான என்வாழ்வு
கரையேறக் காட்டு வழியே
கரும்பூறும் இனிப்பாக கசப்பூறும் வேம்பாகும்
கதிர்வேலா கந்த வடிவே

மடைமீறும் புனல்போல மனம்நாளும் அலைபாயும்
மதிவாணா காக்க எனையே
மனத்தூறும் பயம்போக்கி மாளாத துயரோட்ட
மயிலேறி வருக துரையே
உடைமாறிக் கோலேந்தி உருமாறி நின்றாடும்
உன்பாதம் மென்மை இதமே
உறவாடுந் தேவானை குறமாதுன் உடனாக
ஓடோடி வருக நிதமே

பொய்யான என்வாழ்வு புவிமீது உழன்றாடும்
புகழான தெய்வம் நீயே
பு¡¢யாத எளியோனும் பொல்லாங்கு செய்தாலும்
பொறுத்தாள வேண்டும் இனிதே
மெய்யான ஆருளூற்றே மிதமான இளங்காற்றே
மீட்டாளும் கந்த வடிவே
மேலான எழிலோனே மீனாளின் மகனான
மெய்ஞ்ஞான மான பொருளே.

அஞ்ஞானம் மிகப்பேசும் அறியாத புல்லர்க்கும்
அறிவூட்ட வந்த குமரா
அடியேனின் குலங்காக்க அடுங்காலன் தனையோட்டி
அணைத்தாள வந்த முருகா
ஒய்யார மயிலேறும் உமையின்ற எழிலான
உன்பாதம் மென்மை இதமே
உறவாடுந் தேவானை குறமாதுன் உடனாக
ஓடோடி வருக நிதமே.

தென்கூடல் நகராளும் திருமீனாள் உனைத்தேடித்
திருவீதி சுற்றி வருவாள்
சீர்காசித் தாயாராம் சிறப்பான சாலாட்சி
தினம் நாடித் தேடி வருவாள்
மன்றான தில்லையிலே மாதாவாம் தருமாம்பாள்
மனம்வாடி நின்றாள் மிகவே
மகிழ்வான ஐயாற்று வாழ்வான தருமாம்பாள்
மனந்தேடும் உன்றன் முகமே

குன்றேறிக் கனிதேடும் குகநேசா வரவேணும்
குணமோங்கு தாயின் இடமே
குறையாத அன்போடு கூர்வேலும் தருவாளாம்
குணம்மாறி வீடுக சினமே
உன்மேனி பொன்னாகும் உமைநாடும் எழிலான
உன்பாதம் மென்மை இதமே
உறவாடுந் தேவானை குறமாதுன் உடனாக
ஓடோடி வருக நிதமே.

வானோ¡¢ன் முறையீடு தனைக்கேட்டுச் சா¢யான
வழிகூற வந்த குமரா
வன்சூரர் தலைவாங்கி வானோ¡¢ன் முடியேற்ற
வடிவோலை ஏந்தும் முருகா
தேனூறும் பூமாலை திருமார்பில் அசைந்தாடத்
திருநீறு பூசும் அழகே
தேவகுலப் பா¢சான தேவானை தனையேற்றுத்
திருவாழ்வு தந்த எழிலே

தானேறும் மயிலாடத தனிவேலும் தானாடத்
தமிழ்கூறும் மூல முதலே
தளராத மதியோடு சா¢யாத நிதிகூட்டித்
தரவேணும் கோடி நலமே
ஊனோடு உயிராகி உணர்வாகி உலகாளும்
உன்பாதம் மென்மை இதமே
உறவாடுந் தேவானை குறமாதுன் உடனாக
ஓடோடி வருக நிதமே.

அடையாத திருவீதி அழகான நின்கோயில்
அதைநாடும் என்றன் மனமே
அபிஷேகம் பன்னீரால் அலங்காரம் வெண்ணீரால்
அதிரூபம் உன்றன் எழிலே
கடலாளும் கலமாகும் கனவாகும் என்வாழ்வு
கரையேறக் காட்டு வழியே
கரும்பூறும் இனிப்பாகக் கசப்பூறும் வேம்பாகும்
கதிர்வேலா கந்த வடிவே

மடைமீறும் புனல்போல மனம்நாளும் அலைபாயும்
மதிவாணா காக்க எனையே
மனத்தூறும் பயம்போக்கி மாளாத தூயரோடட
மயிலேறி வருக துரையே
உடைமாறிக் கோலேந்தி உருமாறி நின்றாடும்
உன்பாதம் மென்மை இதமே
உறவாடுந் தேவானை குறமாதுன் உடனாக
ஓடோடி வருக நிதமே

பொய்யான என்வாழ்வு புவிமீது உழன்றாடும்
புகழான தெய்வம் நீயே
பு¡¢யாத எளியோனும் பொல்லாங்கு செய்தாலும்
பொறுத்தாள வேண்டும் இனிதே
மெய்யான அருளூற்றே மிதமான இளங்காற்றே
மீட்டாளும் கந்த வடிவே
மேலான எழிலோனே மீனாளின் மகனான
மெய்ஞ்ஞான மான பெருளே.

அஞ்ஞானம் மிகப்பேசும் அறியாத புல்லார்க்கும்
அறிவூட்ட வந்த குமரா
அடியேனின் குலங்காக்க அடுங்காலன் தனையோட்டி
அணைத்தாள வந்த முருகா
ஒய்யார மயிலேறும் உமையீன்ற எழிலான
உன்பாதம் மென்மை இதமே
உறவாடுந் தேவானை குறமாதுன் உடனாக
ஓடோடி வருக நிதமே.

நினைகாக்கப் பண்பாடிச் சிறகாடும்பு ள்ளோடக்
செய்வாளாம் வள்ளி எழிலே
திருவள்ளி எழில்தன்னைத் தி¡¢லோக முனிகூறத்
தினைக்காடு நாடும் அழகே
வினையேதும் வாராமல் வெற்றியது கைகூட
வேழமுகன் செய்தான் வழியே
வெண்தாடிக் கிழமாகி வெறுங்கோலைக் கையென்றும்
விளையாட்டிற்கு இல்லை இணையே

நினைமாவை மிகமாந்திச் செவியாற இசைகேட்டுச்
சீராடி வந்த திருவே
சீர்யானை தனைக்காட்டிக் குறமாதை மணஞ்சூடிச்
சிறப்போடு கொஞ்சும் குமரா
உனைநாடி வருங்கோடி உயிர்காத்து நலமீயும்
உன்பாதம் மென்மை இதமே
உவாடுந் தேவானை குறமாதுன் உடனாக
ஓடோடி வருக நிதமே.

விண்ணாகி நிலவாகி வெயிலாகி மழையாகி
விருதோடு ஆடும் அழகே
விதியாகி மதியாகி விருந்தாகி மருந்தாகி
வினையோட வைத்த குமரா
மண்ணாகி நதியாகி விதையாகிப் பயிராகி
வளங்கூடச் செய்யும் அரசே
மலையாகிக் கடலாகி மலராகி மணமாகி
வடிவாகி நின்ற முருகா

பெண்ணாகி ஆணாகிப் பிறப்பாகி இறப்பாகும்
பெருவாழ்வு உன்றன் வசமே
பேச்சாகிச் செயலாகி மூச்சாகி உயிராகிப்
பிழைப்போக்குஞ் செந்தூர் வளமே
ஒன்றாகிப் பலவாகி ஒருகோடி நூறாகும்
உன்பாதம் மென்மை இதமே
உறவாடுந் தேவானை குறமாதுன் உடனாக
ஓடோடி வருக நிதமே.