செல்வமுத்துக்குமாரன்
முத்துக்குமரா முத்துக்குமரா முத்துக்குமரா வா வா வா
செல்வக்குமரா செல்வக்குமரா செல்வம் அள்ளித்தா தா தா
புள்ளூர் வாழும் முருகனை மனதில் எண்ணிக் கொள்ளுங்கள்
பொன்னும் தருவான் பொருளும் தருவான் அள்ளிக் கொள்ளுங்கள்
புள்ளிமயிலோன் வள்ளி மணாளன் புகழைப் பாடுங்கள்
வள்ளிக் கணவன் அள்ளித் தருவான் வாங்கிக் கொள்ளுங்கள்
காட்டுப் பாதை வண்டிகள் கட்டி கால்நடைப் போடுங்கள்
காட்டுவான் பாதை கந்தன் நம் வாழ்வில் கவலையைத் தள்ளுங்கள்
செந்தூர் கந்தன் சீரலை வாயில் சி¡¢ப்பதைப் பாருங்கள்
இந்தூர் கந்தன் இன்பம் தருவான் ஏற்றுக் கொள்ளுங்கள்
சக்தியின் மைந்தன் சண்முக நாதனை அர்ச்சனை செய்யுங்கள்
வைத்திய செல்வன் வளமாய்த் தருவதை வாங்கிக் கொள்ளுங்கள்
சித்திரை மாதம் பெளர்ணமி நிலவாய் சி¡¢ப்பதைப் பாருங்கள்
பத்தரை மாற்றுத் தங்கம் அவனை பற்றிக் கொள்ளுங்கள்
அருண் வீரப்பா, காரைக்குடி