அம்பிகை

தேடியுனைச் சரணடைந்தேன் தேசமுத்துமா¡¢
கேடதனை நீக்கிடுவாய் கேட்ட வரந்தருவாய்
பாடியுனைச் சரணடைந்தேன் பாசமெல்லாங் களைவாய்
கோடிநலஞ் செய்திடுவாய் குறைகளெல்லாம் தீர்ப்பாய்
எப்பொழுதும் கவலையிலே இணங்கி நிற்பான்பாவி
ஒப்பியுனதேவல் செய்வேன் உனதருளால் வாழ்வேன்
சக்தியென்று நேரமெல்லாம் தமிழ்க் கவிதைபாடி
பக்தியுடன் போற்றி நின்றால் பயமனைத்தும் தீரும்
ஆதாரம் சக்தியென்றே அருமறைகள் கூறும்
யாதானுந் தொழில்பு¡¢வோம் யாதுமவள் தொழிலாம்
துன்பமே இயற்கையெனும் சொல்லை மறந்திடுவோம்
இன்பமே வேண்டிநிற்போம் யாவுமவள் தருவாள்
நம்பினோர் கெடுவதில்லை நான்கு மறைத்தீர்ப்ழு
அம்பிகையைச் சரண்புகுந்தால் அதிகவரம் பெறலாம்.