முருகா உன்னை அழைக்கின்றேன்

வேல் வேல் முருகா வேலையா
வெற்றிவேல் முருகா வேலையா
வேல் வேல் முருகா வேலையா
வெற்றிவேல் முருகா வேலையா


முருகா உன்னை அழைக்கின்றேன்
முத்தமிழ் பாடித் துதிக்கின்றேன்
மருகா உன்னை அழைக்கின்றேன்
மறைகள் பாடித் துதிக்கின்றேன்

கந்தா உன்னை அழைக்கின்றேன்
கவசம் பாடித் துதிக்கின்றேன்
மன்னா உன்னை அழைக்கின்றேன்
மந்திரம் பாடித் துதிக்கின்றேன்

வேலா உன்னை அழைக்கின்றேன்
விருத்தம் பாடித் துதிக்கின்றேன்
மாலா உன்னை அழைக்கின்றேன்
மயிலைப் பாடித் துதிக்கின்றேன்

சண்முகா உன்னை அழைக்கின்றேன்
சரணம் பாடித் துதிக்கின்றேன்
கண்ணின் மணியை அழைக்கின்றேன்
காவியம் பாடித் துதிக்கின்றேன்

-குறள் இலக்குவன், காரைக்குடி.