வினை தீர்க்கும் கந்தன்
திருத்தணி மலைமேல் இருப்பவனே-எங்கள்
தீராத வினைகளைத் தீர்ப்பவனே
கந்தா கடம்பா வேல்முருகா
கார்த்தி கேயா வேல்முருகா
திருத்தணி நோக்கி வருகின்றோம்-உந்தன்
திருவடி காண வருகின்றோம்
கந்தா கடம்பா வேல்முருகுல்
கார்த்தி கேயா வேல்முருகா
பழநியை நோக்கியும் செல்கின்றோம்-அவன்
பாதத்தைக் காணவும் செல்கின்றோம்
கந்தா கடம்பா வேல்முருகா
கார்த்தி கேயா வேல்முருகா
பங்குனி உத்திரத் திருநாளில்-உனக்கு
பாலா பிஷேகம் செய்யவாரோம்
கந்தா கடம்பா வேல்முருகா
கார்த்தி கேயா வேல்முருகா
பாதங்கள் தேய நடந்துவாரோம்-உந்தன்
பாதத்தைக் காண ஓடிவாரோம்
கந்தா கடம்பா வேல்முருகா
கார்த்தி கேயா வேல்முருகா
காவடி தாங்கிக் கால்கடுக்க-உந்தன்
காலடி நோக்கி நடந்துவாரோம்
கந்தா கடம்பா வேல்முருகா
கார்த்தி கேயா வேல்முருகா
குன்றுகள் தோறும் குடியிருப்பான்-அவனைக்
கும்பிடக் கும்பிட அருள்புரிவான்
கந்தா கடம்பா வேல்முருகா
கார்த்தி கேயா வேல்முருகா
ஆவினன் குடிவாழ் அழகனவன்-இந்தப்
பாவியைக் காத்து அருள்புரிவான்
கந்தா கடம்பா வேல்முருகா
கார்த்தி கேயா வேல்முருகா
வருடத்துக் கொருமுறை உனைத்தேடி-எங்கள்
வறுமையைத் தீர்க்க நடந்துவாரோம்
கந்தா கடம்பா வேல்முருகா
கார்த்தி கேயா வேல்முருகா
காணும் பக்தர் அனைவரையும்-அவன்
பேணிக் காத்து அருள்புரிவான்
கந்தா கடம்பா வேல்முருகா
கார்த்தி கேயா வேல்முருகா
திருத்தணி மலைமேல் இருப்பவனே-எங்கள்
தீராத வினைகளைத் தீர்ப்பவனே
கந்தா கடம்பா வேல்முருகா
கார்த்தி கேயா வேல்முருகா
திருத்தணி நோக்கி வருகின்றோம்-உந்தன்
திருவடி காண வருகின்றோம்
கந்தா கடம்பா வேல்முருகுல்
கார்த்தி கேயா வேல்முருகா
பழநியை நோக்கியும் செல்கின்றோம்-அவன்
பாதத்தைக் காணவும் செல்கின்றோம்
கந்தா கடம்பா வேல்முருகா
கார்த்தி கேயா வேல்முருகா
பங்குனி உத்திரத் திருநாளில்-உனக்கு
பாலா பிஷேகம் செய்யவாரோம்
கந்தா கடம்பா வேல்முருகா
கார்த்தி கேயா வேல்முருகா
பாதங்கள் தேய நடந்துவாரோம்-உந்தன்
பாதத்தைக் காண ஓடிவாரோம்
கந்தா கடம்பா வேல்முருகா
கார்த்தி கேயா வேல்முருகா
காவடி தாங்கிக் கால்கடுக்க-உந்தன்
காலடி நோக்கி நடந்துவாரோம்
கந்தா கடம்பா வேல்முருகா
கார்த்தி கேயா வேல்முருகா
குன்றுகள் தோறும் குடியிருப்பான்-அவனைக்
கும்பிடக் கும்பிட அருள்புரிவான்
கந்தா கடம்பா வேல்முருகா
கார்த்தி கேயா வேல்முருகா
ஆவினன் குடிவாழ் அழகனவன்-இந்தப்
பாவியைக் காத்து அருள்புரிவான்
கந்தா கடம்பா வேல்முருகா
கார்த்தி கேயா வேல்முருகா
வருடத்துக் கொருமுறை உனைத்தேடி-எங்கள்
வறுமையைத் தீர்க்க நடந்துவாரோம்
கந்தா கடம்பா வேல்முருகா
கார்த்தி கேயா வேல்முருகா
காணும் பக்தர் அனைவரையும்-அவன்
பேணிக் காத்து அருள்புரிவான்
கந்தா கடம்பா வேல்முருகா
கார்த்தி கேயா வேல்முருகா