வேல்வேல் முருகா

வேல்வேல் முருகா வேல்முருகா
வேல்வேல் முருகா வேல்முருகா
வேல்வேல் முருகா வேல்முருகா
வேல்வேல் முருகா வேல்முருகா


ஆடும் மயிலும் வாகனம் தான்
ஆறுமுகமும் மோகனம் தான்
பாட்டும் கூத்தும் அவன்வேதம்
பாடித் தொழுவோம் அவன்பாதம்(வேல் வேல்)

காலும் கையும் நடைபோடும்
கந்தன் முருகன் படைகூடும்
நாளும் பொழுதும் அவன் நாமம்
நாயகன் வீடே கதிர் காமம்(வேல் வேல்)

ஆணும் பெண்ணும் பெரும் கூட்டம்
அவனைக் காண வரும்கூட்டம்
ஊனும் உயிரும் ஓராறு
உண்மைப் பொருளே திருநீறு(வேல் வேல்)

கல்லும் மலரும் ஒன்றாகும்
கந்தன் கோவில் ஒன்றாகும்
உள்ளும் புறமும் தவமயமே
உமையாள் செல்வன் சிவமயமே(வேல் வேல்)

அல்லும் பகலும் நெய்வாசம்
அடியார் போற்றும் தைப்பூசம்
சொல்லும் பொருளும் விளையாடும்
சொர்க்கம் பழநி மலையாகும்(வேல் வேல்)

வேலும் மயிலும் துணையாகும்
வினைகள் தீர்க்கும் மருந்தாகும்
பாலும் பழமும் உணவாகும்
பழநி மலையே உயிராகும்.(வேல் வேல்)