ஸ்வாமி பொன் ஐயப்பா சரணம் பொன் ஐயப்பா


ஸ்வாமி பொன் ஐயப்பா சரணம் பொன் ஐயப்பா
சபரிகிரி நாயகனே சரணம் ஐயப்பா


அச்சன் கோவில் அரசே என் அச்சம் தீர்க்கவா
பச்சை மயில் ஏறும் பன்னிரு கையன் சோதரா
இச்சைகொண்டேன் உந்தன் முன்னே ஈஸ்வரன் மைந்தா
பச்சை வண்ணம் பரந்தாமன் மகிழும் செல்வா

ஆரியங்காவில் வாழும் ஆண்டவனே வா
பார்வதியால் அகமகிழும் பாலகனே வா
எருமேலி வீற்றிருக்கும் இறைவனே நீ வா
தர்மஞான சாஸ்தாவே தயவுடனே வா

ஸ்வாமி பொன் ஐயப்பா சரணம் பொன் ஐயப்பா
சபரிகிரி நாயகனே சரணம் ஐயப்பா

மலைமேடு சபரிமலை மன்னவனே வா
குறைதீர்க்கும் குளத்துப்புழை பாலனே நீ வா
மன்னவனே மணிகண்டனே மகிழ்வுடனே வா
வன்புலிமேல் காட்சி தரும் வள்ளலே நீ வா

ஸ்வாமி பொன் ஐயப்பா சரணம் பொன் ஐயப்பா
சபரிகிரி நாயகனே சரணம் ஐயப்பா

தேவர்களும் உனைப்பணிய காந்த மலையிலே
நீ ஆவலுடன் காட்சி தந்தாய் ஜோதி உருவிலே
காவலனே கண்ணாரக் கண்டோமே ஜோதி தனை
நாவார உனை அழைத்தோம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா
ஸ்வாமி பொன் ஐயப்பா சரணம் பொன் ஐயப்பா
சபரிகிரி நாயகனே சரணம் ஐயப்பா