ஓரு தரம் சரவணபவா என்று சொல்பவர்
உளதினில் நினைத்த எல்லாம்
உடனேகை கூடுமென வேதங்கள் மொழியுதே;
உண்மை அறிவான பொருளே!

பரிவாகவே அநந்தந் தரம் சரவண
பவாவென்று நான் சொல்லியும்,
பாங்குமிகு காங்கேயா! அடியனேன்
எண்ணியது பலியாதிருப்ப(து) ஏனோ?

குருபரா! முருகையா! கந்தா! கடம்பா!
சொல் குமரா! குகா! சண்முகா!
கோலா கலா! வெற்றி வேலா! எனக்கருள்
கொடுத்(து)ஆள்வை முத்தையனே!

மருமலர்க் குழலழக தேவகுஞ்சரி, வள்ளி
மணவாளனே! என் துணைவனே!
வண்ணமயில் வாகனா! பொன்னேரகப்
பதியில் வளர் சாமிநாத குருவே.

ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற
உத்தமர்தம் உறவு வேண்டும்
உள்ளொன்று வைத்துப் புறம்மொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்

பெருமை பெறும் நினது புகழ் பேசவேண்டும்
பொய்மை பேசா திருக்க வேண்டும்
பெருநெறி பிடித்தொழுக வேண்டும்
மதமான பேய் பிடியா திருக்க வேண்டும்

மதி வேண்டும் நின்கருணை நிதி வேண்டும்
நோயற்ற வாழ்வு நான் வாழ வேண்டும்
தண்முகத் துய்யமணி யுண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வ மணியே......