காலமெல்லாம் நமக்குத் துணையானவள்
ஒருகோடி சந்திரனின் ஒளியானவள்
உலகாளும் ஞானாக்ஷச் வடிவானவள்
கருவாக்கி உருவாக்கி நமைக்காப்பவள்
காலமெல்லாம் நமக்குத் துணையானவள்.
நாதத்திலே கலந்த இசையானவள்
நானென்ற மமதைக்கு எதிரானவள்
வேதத்திலே விளங்கும் பொருளானவள்
வேதனை தீர்க்கும்நல் மருந்தானவள். (ஒரு)
குறையாது அருள்வழங்கும் குருவானவள்
குலம்காத்து நலம்காக்கும் திருவானவள்
ஓமென்ற மந்திரத்தின் பொருளானவள்
ஊனாகி உடலாகி உயிரானவள். (ஒரு)
பூவாகிக் காயகிக் கனியானவள்
பொங்கும் அருட்கடலின் வடிவானவள்
சேயாக்கி எனையெடுத்துச் சீராட்டுவாள்
சிந்தையெல்லாம் குளிரத் தாலாட்டுவாள். (ஒரு)
தேவகோட்டை லெ.சோமு.
ஒருகோடி சந்திரனின் ஒளியானவள்
உலகாளும் ஞானாக்ஷச் வடிவானவள்
கருவாக்கி உருவாக்கி நமைக்காப்பவள்
காலமெல்லாம் நமக்குத் துணையானவள்.
நாதத்திலே கலந்த இசையானவள்
நானென்ற மமதைக்கு எதிரானவள்
வேதத்திலே விளங்கும் பொருளானவள்
வேதனை தீர்க்கும்நல் மருந்தானவள். (ஒரு)
குறையாது அருள்வழங்கும் குருவானவள்
குலம்காத்து நலம்காக்கும் திருவானவள்
ஓமென்ற மந்திரத்தின் பொருளானவள்
ஊனாகி உடலாகி உயிரானவள். (ஒரு)
பூவாகிக் காயகிக் கனியானவள்
பொங்கும் அருட்கடலின் வடிவானவள்
சேயாக்கி எனையெடுத்துச் சீராட்டுவாள்
சிந்தையெல்லாம் குளிரத் தாலாட்டுவாள். (ஒரு)
தேவகோட்டை லெ.சோமு.