வெள்ளி ஊஞ்சல்

ஆடுதய்யா ஆடுதய்யா வெள்ளி ஊஞ்சல்
அழகாக ஆடுதய்யா வெள்ளி ஊஞ்சல்
உள்ளமெல்லாம் நாடுகின்ற வெள்ளி ஊஞ்சல்
ஓம்முருகன் ஆடுகின்ற வெள்ளி ஊஞ்சல்
தெள்ளமுதச் சந்தப்பாட்டு வெள்ளி ஊஞ்சல்
தென்பழனி வேந்தன் பாட்டு வெள்ளி ஊஞ்சல்
சக்திமகன் சரவணத்தின் வெள்ளி ஊஞ்சல்
சண்முகனின் பொன்முகமே வெள்ளி ஊஞ்சல்
பக்திக்கடல் ஓசைஒலி வெள்ளி ஊஞ்சல்
பார்புகழும் வேலன்ஒளி வெள்ளி ஊஞ்சல்
செம்படையின் பட்டிபுகழ் வெள்ளி ஊஞ்சல்
சிங்கார வேலன் ஆடும் வெள்ளி ஊஞ்சல்
எட்டுதிக்கும் புகழ்மணக்கும் வெள்ளி ஊஞ்சல்
ஏழிசையின் கலைமணக்கும் வெள்ளி ஊஞ்சல்
செட்டிமகன் புகழ்பாடும் வெள்ளி ஊஞ்சல்
செல்வமகன் வரம்நாடும் வெள்ளி ஊஞ்சல்
சடையப்பர் மண்டபத்தில் வெள்ளி ஊஞ்சல்
சஞ்சலத்தைப் போக்குகின்ற வெள்ளி ஊஞ்சல்
நடைப்பயண இடர்நீக்கும் வெள்ளி ஊஞ்சல்
நாதமயில் அண்ணாமலை வெள்ளி ஊஞ்சல்