அன்பும் அருளும் வேல்முருகா

முருகா முருகா வேல்முருகா
அன்பும் அருளும் வேல்முருகா


முருகா முருகா வேல்முருகா
அன்பும் அருளும் வேல்முருகா
வினைகள் தீர்க்கும் வேல்முருகா - அனைத்து
வளங்கள் தருவாய் வேல்முருகா

(முருகா)

சிங்கையில் இருக்கும் வேல்முருகா
சிக்கலை தீர்க்கும் வேல்முருகா
வெற்றியை தந்திடும் வேல்முருகா - நல்ல
கல்வியை தருவாய் வேல்முருகா

(முருகா)

உறவுகள் தந்த வேல்முருகா
உலகம் காக்கும் வேல்முருகா
உண்மைப் பொருளே வேல்முருகா - எம்மை
காத்து அருள்வாய் வேல்முருகா

(முருகா)


விக்னேஷ் முத்தையா
(என்ற)
மீனாட்சி சுந்தரம் சக்திகுமார்
ஜனவரி 2008.