கண்ணன்பிறக்க மாட்டானா

குழந்தையாக மீண்டும் கண்ணன் பிறக்கமாட்டானா
புல்லாங்குழல் ஊதி நம்மை மயக்க மாட்டானா

குழந்தையாக மீண்டும் கண்ணன் பிறக்கமாட்டானா
புல்லாங்குழல் ஊதி நம்மை மயக்க மாட்டானா
மழலையாகப் பேசி நம்மை மயங்கச் செய்வானா
செம்பவளவாயால் முத்தம் ஒன்று கொடுக்கமாட்டானா
மாடு, கன்று காட்டில் ஓட்டி மேய்க்கமாட்டானா - அவன்
வீடுகளில் உறிவெண்ணெயைத் திருடமாட்டானா
என்னை அவன் தோழனாக ஏற்கமாட்டானா - அந்த
வெண்ணெயில் நான் பங்கு போட்டு தின்ன மாட்டேனா
மலையில் ஏறி குடையாக பிடிக்கமாட்டானா - நம்
தலையில் அந்த மலை விழாமல் தடுக்க மாட்டானா
மாயம் காட்டி காலம் காட்டி மயங்கச் செய்வானா
ஜாடை காட்டி நம் மனதை கொள்ளை கொள்வானா
கீதையைத் தான் திரும்ப வந்து உறைக்கமாட்டானா - அந்த
பாதையில் நாம் நல்லவராய் நடக்கமாட்டோமா

அருண் வீரப்பா காரைக்குடி