கற்பக மூர்த்தி ஐயா கற்பக மூர்த்தி

கற்பக மூர்த்தி ஐயா கற்பக மூர்த்தி
கவலைகளைப் போக்கிடுவாய் கற்பக மூர்த்தி

மூலமுதல் ஆனவனே கற்பக மூர்த்தி - நீ
முன்வந்து காத்தருள்வாய் கற்பக மூர்த்தி

காலமிது காலமிது கற்பக மூர்த்தி- என்
கவலைகளை போக்கிடுவாய் கற்பக மூர்த்தி

வெற்றிதர வருவாயே கற்பக மூர்த்தி- நான்
வேண்டும் வரம் தந்தருள்வாய் கற்பக மூர்த்தி

உற்ற துணை தெய்வமுமே கற்பக மூர்த்தி-உனை
ஓதுவதும் செய் தவமே கற்பக மூர்த்தி

நல்ல நல்ல செய்திவரும் கற்பக மூர்த்தி-மனம்
நாடியது தேடிவரும் கற்பக மூர்த்தி

வல்லமைகள் பொங்கிவர கற்பக மூர்த்தி-உனை
வணங்கி வந்தால் வெற்றிவரும் கற்பக மூர்த்தி

கற்பக மூர்த்தி ஐயா கற்பக மூர்த்தி
கவலைகளைப் போக்கிடுவாய் கற்பக மூர்த்தி