வேதனை தீர்ப்பாய் வேலவனே

அன்பு மனக் கோயிலிலே அய்யா உன்னை நானும் வைத்தேன்
ஆறுமுக வேலவனே அருள்தரவே வந்திடுவாய் !


எத்தனையோ பிறவி பெற்று இன்னல் மிக நானும் பெற்றேன்
இன்னலின்றி வாழ்வுதர இதுதருணம் வந்திடுவாய் !
நீயிருக்குமிடம் தேடி நானும் வரத் தெரியவில்லை
நீலமயில் மீதமர்ந்து நீயுமிங்கே வந்திடுவாய் !

பாராளும் உந்தனுக்கு நானும் ஒரு பாரமில்லை
பார்வதியின் திருக்குமரா பாலன் எனைக் காத்திடுவாய் !
பால் குடத்தைப் பார்த்தவர்கள் பாவமெல்லாம் பறந்தோடும்
பழனிச்சாமி உன்னைத் தொழும் பக்தர்களின் மனம் குளிரும்.

காவடியைக் கண்டவர்கள் கண்களிலே நீர்பெருகும்
கந்தா உன் திருப்புகழில் காலமெல்லாம் வாழுகின்றோம்
வேதப் பொருள் உரைத்தவனே வேழ முகன் சோதரனே
வேகமுடன் நீயும் வந்து பாலனெனைக் காத்திடுவாய்.

தேவகோட்டை லெ.சோமு.